Home
Mobile

45W சார்ஜர் இலவசம்.. ரூ.6000 டிஸ்கவுண்ட்.. Flipkart-ல் வெறும் ரூ.14,999 க்கு விற்று தீர்க்கும் Realme போன்!

5 மாதங்களுக்கு முன்னால் அறிமுகம் செய்யப்பட்ட போது கூட, இந்த அளவிற்கு விற்கப்படவில்லை என்று கூறும்படியாக.. பிளிப்கார்ட் வலைதளத்தில் நடக்கும் பிக் தீபாவளி விற்பனையில் (Flipkart Big Diwali Sale) லேட்டஸ்ட் ரியல்மி ஸ்மார்ட்போன் ஒன்று "தாறுமாறாக" விற்றுத்தீர்ந்து கொண்டிருக்கிறது. அது ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G ) ஸ்மார்ட்போன் ஆகும்!

இது கடந்த ஏப்ரல் மாதம், ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 Pro 5G), ரியல்மி பேட் 2 வைஃபை வேரியண்ட் (Realme Pad 2 Wi-Fi variant) மற்றும் ரியல்மி பட்ஸ் டி10 (Realme Buds T110) ஆகியவைகளுட உடன் சேர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

Flipkart-ல் வெறும் ரூ.14,999 க்கு விற்று தீர்க்கும் Realme போன்!

தற்போது இது பிளிப்கார்ட் வலைதளத்தில் சில சுவாரசியமான தீபாவளி சலுகைகளை (Diwali Offers) பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.6,000 நேரடி தள்ளுபடி (Instant Discount) அறிவிக்கப்பட்டு உள்ளது; கூடவே இது இலவச 45W சூப்பர்வூக் சார்ஜர் (Free 45W SuperVOOC Charger) உடன் வரும் என்றும் பிளிப்கார்ட் பேனர் விளம்பரப்படுகிறது.

பிளிப்கார்ட் வழங்கும் ரூ.6,000 டிஸ்கவுண்ட்டை தொடர்ந்து ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் எம்ஆர்பி விலையான ரூ.20,999 க்கு பதிலாக ரூ.14,999 என்கிற ஆபர் விலைக்கு வாங்க கிடைக்கிறது.

இதே போல, இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 356ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் எம்ஆர்பி விலையான ரூ.22,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போனின் இவ்விரு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே பீகாக் க்ரீன் (Peacock Green) மற்றும் பீனிக்ஸ் ரெட் (Phoenix Red) கலர்களில் வாங்க கிடைக்கிறது.

ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 2,400 x 1,080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz touch sampling rate) மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் லெவல் (2,000 nits of peak brightness level) உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை (FHD+AMOLED display) கொண்டுள்ளது

இந்த ஸ்மார்ட்போனின் பேனல் ரெயின்வாட்டர் டச் அம்சத்தையும் (Rainwater Touch feature) ஆதரிக்கிறது. இது பயனர்கள் ஈரமான கைகளுடனும் அல்லது மழையிலும் கூட ஸ்மார்ட்போனை பயன்படுத்த அனுமதிக்கிறது. சிப்செட்டை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 7050 (MediaTek Dimensity 7050) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) உடன் அனுப்பப்படும் இந்த போனிற்கு 2 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Major Android Updates) கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரை கொண்டுள்ளது; முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 45W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ரெயின்வாட்டர் டச் அம்சம் ஒருபக்கம் இருக்க ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 மதிப்பீட்டையும் (IP54 dust and splash resistance) கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
28 Percent Discount on Realme P1 5G Free 45W Charger in Flipkart Diwali Sale 2024 Oct 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X