அமேசான் அதிரும் பாருங்க.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Realme NARZO 70x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50எம்பி கேமரா, 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போனுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12.998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த போனை ரூ.11,998 இருந்தால் போதும் வாங்கிவிட முடியும்.

ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 70x 5G specifications): சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+ SoC) பிராசஸர் உடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் LCD டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி கேமரா என்கிற டூயல் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இதில் உள்ளன. மேலும் ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
5000எம்ஏச் பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி இதில் உள்ளன. மிஸ்டி ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஸ்னோ மவுண்டன் ப்ளூ நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








