பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 6550mAh பேட்டரி.. 90W பாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 28 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியில் ரூ.22,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,999 விலைக்கு இந்த போகோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி போனை வாங்கி கொள்ளலாம்.
போகோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POCO X7 Pro 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8400 Ultra 4nm) சிப்செட்டை இந்த போகோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், மாலி ஜி720 எம்சி6 ஜிபியு (Mali G720 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கிடைத்துள்ளது. மேலும், 3 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. ஏஐ நோட்ஸ் (AI Notes), ஏஐ ரெக்கார்டர் (AI Recorder), ஏஐ சப்டைட்டில்ஸ் (AI Subtitles), ஏஐ இன்டர்பிரிடர் (AI Interpreter) பீச்சர்கள் உள்ளன.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை இந்த போகோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைத்துள்ளது. 1.5K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 480 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைத்துள்ளது.
3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொடுத்துள்ளது. டால்பி விஷன் (Dolby Vision) கிடைத்துள்ளது. மேலும், வெட் டச் டிஸ்பிளே (Wet Touch Display) மாடலாக இந்த போகோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுத்துள்ளது. சோனி எல்ஒய்டி 600 (Sony LTY 600) சென்சார் உள்ளது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைத்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக ஓம்னிவிஷன் ஓவி20பி (OV20B) சென்சாருடன் 20 எம்பி செல்பீ கேமரா கிடைத்துள்ளது. 6550mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) இந்த போகோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.
லிக்விட் கூல் டெக்னாலஜி 4.0 (LiquidCool Technology 4.0) கிடைத்துள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைத்துள்ளது.
5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது. எல்லோ (Yellow), நெபுளா கிரீன் (Nebula Green) மற்றும் அப்சிடியன் பிளாக் (Obsidian Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








