செய்கைனா இதுதான்.. வெறும் ரூ.13,249 போதும்.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Freedom Festival Sale) 108 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்ட போக்கோ எக்ஸ்6 நியோ (POCO X6 Neo) போனுக்கும், 64 எம்பி கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5100mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே கொண்ட போக்கோ எக்ஸ்6 (POCO X6) போனுக்கும் நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த போன்களின் பீச்சர்கள் மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
போக்கோ எக்ஸ்6 நியோ அம்சங்கள், விலை (POCO X6 Neo Specifications Price): ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கொண்ட 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது.

சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) மாடலாகும். ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
அஸ்ட்ரல் பிளாக் (Astral Black,), ஹொரைசன் ப்ளூ (Horizon Blue) மற்றும் மார்டியன் ஆரஞ்ச் (Martian Orange) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆக இருந்தது. இப்போது அமேசான் தளத்தில் ரூ.14,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ,1250 உடனடி டிஸ்கவுண்ட் வருகிறது.
போக்கோ எக்ஸ்6 அம்சங்கள், விலை (POCO X6 Specifications Price): இந்த போக்கோவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) டிஸ்பிளே அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

மேலும், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7S Gen 2 4nm) சிப்செட் வருகிறது. 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் செட்டப் வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.
67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது. மிரர் பிளாக் (Mirror Black) மற்றும் ஸ்னோவ்ஸ்டோர்ம் ஒயிட் (Snowstorm White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போக்கோ எக்ஸ்6 போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999 ஆக இருந்தது.
ஆனால், இப்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் வெறும் ரூ.18,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1750 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதேபோல ரூ.18,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, இந்த போக்கோ எக்ஸ்6 போனை ரூ.17,249 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications