Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 67W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

3டி அமோலெட் டிஸ்பிளே, சோனி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், 67W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட ஓப்போ ரெனோ 11 (Oppo Reno 11) போனானது, விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட்டில் இதுவரையில் கிடைக்காத பட்ஜெட்டுக்கு வந்துள்ளது.

ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமான கேமரா சிஸ்டம், பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொண்ட சிப்செட், கிராபிக்ஸ் மற்றும் ரேம் போன்ற மொத்த பீச்சர்களிலும் இந்த ஓப்போ ரெனோ 11 5ஜி போன் பின்னிப்பெடல் எடுக்கிறது. முதலில் முழு பீச்சர்கள் பார்ப்போம்.

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்!

ஓப்போ ரெனோ 11 5ஜி அம்சங்கள் (Oppo Reno 11 5G Specifications): இந்த ஓப்போவில் பிரீமியம் சென்சார்களுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera Sytem) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஓய்டி600 (Sony LYT600) சென்சார் வருகிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்டிருக்கிறது.

அதேபோல 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாரும், 32 எம்பி டெலிபோட்டோ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சாரும் வருகிறது. போர்ட்ராய்டு எக்ஸ்பெர்ட் என்ஜின் (Portrait Expert Engine) டெக்னாலஜி கொண்டிருக்கிறது.

ஆட்டோ போகஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. ஏஐ எரேசர் (AI Eraser) பீச்சர் கொண்டுள்ளது. போர்ட்ராய்டு பீச்சர் மற்றும் ஓம்னிவிஷன் ஓவி32சி (OmniVision OV32C) சென்சாருடன் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, இந்த ஓப்போ ரெனோ 11 போனில் அல்ட்ரா பிரீமியம் கேமரா அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்!

இந்த ஒப்போ ரெனோ 11 5ஜி போனில் 8ஜிபி டைனாமிக் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கப்படவில்லை.

6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஏஜிசி டிடி ஸ்டார் 2 (AGC DT Star 2) கிளாஸ் கொண்டிருக்கிறது. 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் மற்றும் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது.

5000mAh பேட்டரி உள்ளது. டைப்-சி போர்ட் சப்போர்ட் வருகிறது. இந்த ஓப்போவில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டிருக்கிறது.

வேவ் கிரீன் (Wave Green) மற்றும் ராக் கிரே (Rock Grey) ஆகிய 2 கலர்களில் கிடைக்கிறது. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டப்போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகவும் இருந்தது. இந்த விலையில் ரூ.2000 குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.2,799 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் மல்டிபிள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த ஓப்போ ரெனோ 11 5ஜி போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலை வெறும் ரூ.25,200 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
28 Percent Discount on Oppo Reno 11 5G With 16GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X