யாரு சாமி அவன்.. ரூ.11,499 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. 64MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் நம்ப முடியாத பட்ஜெட்டில் 3டி கரவ்ட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 64 எம்பி மெயின் கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான லாவா போல்டு 5ஜி (Lava Bold 5G) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக கிடைப்பதால் ஆர்டர் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்கள் கிடைக்கின்றன? எங்கு விற்பனை செய்யப்படுகிறது? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
லாவா போல்டு 5ஜி அமேசான் விற்பனை (Lava Bold 5G Amazon Sale): இந்த லாவா போனின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தாலும் ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.12,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்கும்படி சப்பயர் ப்ளூ (Sapphire Blue) என்னும் ஒரேவொரு கலரில் ஆர்டருக்கு கிடைக்கிறது.
லாவா போல்டு 5ஜி அம்சங்கள் (Lava Bold 5G Specifications): இந்த லாவா போனின் பட்ஜெட்டுக்கும் பீச்சர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல தோன்றலாம். ஏனென்றால், ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல்களில் இருப்பதை போல பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. முதலில் டிஸ்பிளேவை சொல்லலாம். இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் 3டி கரவ்ட் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கிறது.

IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், சோனி சென்சார் கேமரா ஆகிய பீச்சர்களும் பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாதவையாகவே இருக்கின்றன. இந்த லாவா போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்டை கொடுக்கிறது.
6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED), ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 64 எம்பி மெயின் கேமரா (சோனி சென்சார்) + 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயர் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது.
இந்த கேமராவில் எச்டி வீடியோ ரெக்கார்டிங், டூயல் வியூ வீடியோ, நைட் மோட், போர்ட்ராய்டு மோட் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இன்த லாவா போல்டு 5ஜி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்த லாவா போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. ஃபுல் சார்ஜ் செய்ய 110 நிமிடங்கள் தேவைப்படும். 480 மணி நேரங்களுக்கு ஸ்டாண்ட்-பை டைம் கொடுக்கும். மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) கிடைக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகும்.


Click it and Unblock the Notifications