பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.11,999 போதும்.. 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
அமேசான் டிஸ்கவுண்ட்டில் 1 டிபி மெமரி, 8 ஜிபி ரேம், ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, 50 எம்பி ஏஐ கேமரா போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் டிசைனில் ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) போனானது, நம்ப முடியாத விலைக்கு கிடைக்கிறது. நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கம்மியாகவும், பேங்க் டிஸ்கவுண்ட் உடனும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஐக்யூ இசட்9எஸ்க் போன் குறித்த முழு விவரங்கள் இதோ.
ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி விலை (iQOO Z9x 5G Price): இந்த ஐக்யூவில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. இந்த போன் அறிமுகமான போது, 6 ஜிபி மாடலின் விலை ரூ.15,999ஆகவும், 4 ஜிபி மாடலின் விலை ரூ.14,999ஆகவும் இருந்தது.

இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) 6 ஜிபி மாடல் ரூ.14,499 பட்ஜெட்டிலும், 4 ஜிபி மாடல் ரூ.12,999 பட்ஜெட்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.11,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.
ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z9x 5G Specifications): பிரீமியம் டிசைனில் டொர்னாடோ கிரீன் (Tornado Green) மற்றும் ஸ்டார்ம் கிரே (Storm Grey) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த ஐக்யூ போனில் 50 எம்பி ஏஐ மெயின் கேமரா (AI Main Camera) வருகிறது. மேலும், 2 எம்பி பொக்கெ கேமரா (Bokeh Camera) வருகிறது.
இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். பொக்கெ, போர்ட்ராய்டு மற்றும் நைட் போன்ற பீச்சர்களுடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் போனில் 6.72 இன்ச் (2408 × 1080 பிக்சல்கள்s) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் மாடலில் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் மாடலில் 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் வருகிறது. மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ் எஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது.
இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. மிட்-ரேஞ்ச் பர்பஃபாமென்ஸ் கொடுக்கும் இந்த சிப்செட் உடன் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
இந்த போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி மற்றும் டைப்-சி போர்ட் வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. 5ஜி, 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத், வை-பை கனெக்டிவிட்டிகள் வருகின்றன.


Click it and Unblock the Notifications