வெளுத்து கட்டுது சேல்.. ரூ.11,999 போதும்.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் காத்திருக்க வைத்த ஐக்யூ இசட்9எக்ஸ் (iQOO Z9x) 5ஜி போன் அமேசான் தளத்தில் டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துவிட்டது. அல்ட்ரா எச்டி கேமரா, 6000mAh பேட்டரி போன்ற அம்சங்களில் பின்னி எடுக்கிறது.
ஐக்யூ இசட்9எக்ஸ் அம்சங்கள் (iQOO Z9x Specifications): இந்த ஐக்யூவில் 50 எம்பி அல்ட்ரா எச்டி ஏஐ-பவர்ட் (Ultra HD AI-Powered) கேமரா வருகிறது. இதுவொரு ஆன்டி-ஷேக் கேமரா (Anti-Shake Camera) மாடலாகும். பொக்கெ சப்போர்ட் கொண்ட 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது.

நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்ரோ மோட் (Pro Mode), லைவ் போட்டோ (Live Photo) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. பொக்கெ பீச்சருடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது.
இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் மாடலில் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) மொபைல் சிப்செட் மற்றும் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் மாடலில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது. அதேபோல மற்ற ரேம் மாடல்களிலும் கூடுதல் டைனாமிக் ரேம் வருகிறது.

மேலும், 1 டிபிக்கானா மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் (microSD Card Support) வருகிறது. 6.72 இன்ச் (2408×1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) பேனல் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் சப்போர்ட் வருகிறது.
மேலும், 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. ஆகவே, பட்ஜெட் மாடல்களில் மிட்-ரேஞ்ச் டிஸ்பிளே அவுட்புட் கொடுக்கும். இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. பெரிய பேட்டரி இருப்பினும், 7.99 மிமீ தடிமனில் ஸ்லிம் பாடி கொண்டிருக்கிறது.
199 கிராம் எடை வருகிறது. ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot), மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot), டைப்-சி சார்ஜிங் (Type-C Charging), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த பட்ஜெட்டிலும் IP64 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது.
இந்த ஐக்யூவில் 5ஜி எஸ்ஏ, 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி வருகிறது. ஸ்டார்ம் கிரே (Storm Grey) மற்றும் டொர்னாடோ கிரீன் (Tornado Green) ஆகிய 2 கலர்களில் வருகிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.12,999ஆகவும், 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.14,999ஆகவும் இருக்கிறது.
அதேபோல 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.15,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் பேங்க் டிஸ்கவுண்ட் உடன் விற்பனை தொடங்கிவிட்டது. எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் பெறலாம். ஆகவே, 4 ஜிபி ரேம் மாடலை ரூ.11,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








