புதிதாக 3 போன்களை அறிமுகப்படுத்தியது மோட்டோரோலா

Posted By: Staff

புதிதாக 3 போன்களை அறிமுகப்படுத்தியது மோட்டோரோலா
மொபைல்போன் மார்க்கெட்டில் முன்பு ஒரு போனை அறிமுகப்படுத்துவதற்கு மொபைல்போன் நிறுவனங்கள் கொடுக்கும் பில்டப்புக்கு அளவே இருக்காது. இதோ வருகிறது, அதோ வருகிறது என்று போக்கு காட்டி விளம்பரத்தை தேடிக்கொள்ளும். ஆனால், இப்போது டிரெண்ட் மாறிவிட்டது.

அடுத்தடுத்த சத்தமில்லாமல் பஞ்ச் பஞ்சாக மொபைல்களை பல நிறுவனங்கள் களத்தில் இறக்கி வருகின்றன. அதிலும், சந்தை போட்டியை சமாளிக்க ஒரே நேரத்தில் பல மொபைல்போன்களை அறிமுகம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில், மோட்டோரோலா நிறுவனம் மூன்று மொபைல்போன்களை சர்வதேச சந்தையில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்துள்ளது. மினி இஎக்ஸ்-108, டபிள்யூஎக்ஸ்-294 மற்றும் எக்ஸ்டி-118 என்ற குறியீட்டு பெயர்களில் சந்தையில் கலக்க விரைவில் வர உள்ளன.

மோட்டோ மினி இஎக்ஸ்-108:

20.இஞ்ச் சிறிய டிஸ்பிளே, 8 மணிநேர டாக்டைம் கொண்ட பேட்டரி, வீடியோ ரெக்கார்டிங், டிஜிட்டல் ஜும் வசதியுடன் 2 மெகாபிக்செல் கேமரா ஆகிய குறிப்பிடத்தக்க அம்சங்கள் இதில் இருக்கின்றன.

மோட்டோ டபிள்யூஎக்ஸ்-294:

வெறும் 65 கிராம் எடை கொண்ட இந்த போன் 1.8 திரை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பேஸிக் விஜிஏ கேமராவை கொண்டுள்ள இந்த போன் பேட்டரி பேக்கப்பில் சிறப்பாக இருக்கிறது.

மோட்டோ எக்ஸ்டி-118:

பார் போன்று ஸ்டைலான தோற்றத்தை தரும் இந்த போன் கிவெர்ட்டி கீபேடு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், 3.0 மெகாபிக்செல் கேமரா, 4*டிஜிட்டல் ஜும் ஆகிய வசதிகளும் இதில் இருக்கிறது.

ஆரம்ப ரக போன்களான இவை அடுத்த மாதம் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விலை விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்