கிராபிக்ஸ் பிராசஸருடன் புதிய ஸ்மார்ட்போன்: ஏஸர் அறிமுகம்

ஏஸர் லிக்யூடூ- இ என்ற பெயரில் வந்துள்ள இந்த போன் அட்ரினோ 200 கிராபிக்ஸ் பிராசஸருடன் வந்துள்ளது.இது 3.5 இஞ்ச் தொடுதிரை வசதியுடன் ஹைடெபினிஷனில் துல்லியமாக படங்களை காட்டுகிறது. ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. தவிர 800 மெகாஹெட்ர்ஸ் கொண்ட ஸ்நாப்ட்ராகன் பிராசஸர் மற்றும் 512 எம்பி ரேம் கொண்டுள்ளதால், மல்டி டாஸ்க்கிங்கில் அதிவேக செயல்பாட்டை காண்பிக்கிறது.
ஆட்டோஃபோகஸ், டிஜிட்டல் ஜும், 5மெகாபிக்செல் கேமராவுடன் வந்துள்ளதால் மல்டிமீடியா அம்சங்களில் நிறைவை தருகிறது. இது 720பி வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் கொடுக்கிறது. அனைத்து பார்மெட்டுகள் கொண்ட ஆடியோ, வீடியோ பைல்களை இயக்க முடியும்என்பதோடு ப்ளேபேக் வசதியையும் பெறலாம். 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் இருப்பதால் கூடுதல் ஸ்பீக்கர்களை இணைத்து இசையை கேட்டு ரசிக்கலாம்.
வைஃபை, புளூடூத், 3ஜி உள்ளிட்ட இணைப்பு வசதிகளை கொண்ட இந்த போனில் 10 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல் பரிமாற்றத்தை பெற முடியும்.இதில், 8 ஜிபி சேமிப்பு திறனையும் கொண்டுள்ளது.
குறிப்பிடத்தக்க அம்சங்கள்:
ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம்
5மெகாபிக்செல் கேமரா
3ஜி மற்றும் வைஃபை
புளூடூத்
32ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டலாம்
800மெகாஹெர்ட்ஸ் பிராசஸர்
இது விலையை வைத்து பார்த்தால் நடுத்தர வர்க்க ஸ்மார்ட்போன் என்றாலும், உயர்வகை ஸ்மார்ட்போனுக்குரிய அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளது. மார்க்கெட்டில் ஏஸர் லிக்யூடு-இ ஸ்மார்ட்போன் ரூ.12,250 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications