அதிரும் பிளிப்கார்ட் .. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் 2025 இந்திய குடியரசு தின (2025 Republic Day Sale) விழா சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறவனங்களின் ஸ்மர்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் விவோ டி3 லைட் 5ஜி போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. ரூ.9249 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும்.

விவோ டி3 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo T3 Lite 5G specifications): 6.56- எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி3 லைட் 5ஜி போன் வெளிவந்தது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 840 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (840 nits peak brightness) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மர்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வசதியுடன் விவோ டி3 லைட் 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
இந்த விவோ 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த விவோ டி3 லைட் 5ஜி போன்.
5000mAh பேட்டரி வசதியுடன் விவோ டி3 லைட் 5ஜி ஆனது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. வைப்ரண்ட் கிரீன் (Vibrant Green) மற்றும் மெஜெஸ்டிக் பிளாக் (Majestic Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த விவோ டி3 லைட் 5ஜி போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 3.5எம்எம் ஆடியோ ஜாக், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் உள்ளன.
குறிப்பாக 5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ டி3 லைட் 5ஜி போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








