மடமடவென குறைந்த Vivo 5ஜி போன் விலை.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ டி3 லைட் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் விவோ டி3 லைட் 5ஜி போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.9,499 விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ டி3 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo T3 Lite 5G specifications): அதாவது 6.56- எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி3 லைட் 5ஜி போன் வெளிவந்தது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 840 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (840 nits peak brightness) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மர்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வசதியுடன் விவோ டி3 லைட் 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ டி3 லைட் 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . பின்பு இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போன்.
குறிப்பாக IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த விவோ டி3 லைட் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

இந்த விவோ டி3 லைட் 5ஜி 5000mAh பேட்டரி உடன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. வைப்ரண்ட் கிரீன் (Vibrant Green) மற்றும் மெஜெஸ்டிக் பிளாக் (Majestic Black) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
விவோ டி3 லைட் 5ஜி போனில் 5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








