அடிச்சு தூக்குது சேல்.. ரூ.21,849 போதும்.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 70W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா, 12 ஜிபி ரேம் மற்றும் ஐ-போகஸ் செல்பீ ஷூட்டர் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட டெக்னோ கேமன் 30 5ஜி (TECNO CAMON 30 5G) போனானது விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட் போக அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. பிரீமியம் டிசைனில் கிடைக்கும் இந்த டெக்னோ கேமன் 30 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,998ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.23,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, எந்தவொரு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டும் இல்லாமலேயே ரூ.2,999 விலை குறைப்பில் வந்துள்ளது. இதுபோக ரூ.1,150 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.21,849 பட்ஜெட்டில் இப்போது வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.9,800 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. பிரீமியம் லுக்கில் ஐஸ்லேண்ட் பசல்டிக் டார்க் (Iceland Basaltic Dark) மற்றும் உயூனி சால்ட் ஒயிட் (Uyuni Salt White) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிக்கு என்னென்ன பீச்சர்கள் கிடைக்கிறது?
டெக்னோ கேமன் 30 5ஜி அம்சங்கள் (TECNO CAMON 30 5G Specifications): இந்த டெக்னோவில் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 எஸ்ஓசி (Octa Core 6nm MediaTek Dimensity 7020 SoC) சிப்செட் ஹாய்ஓஎஸ் 14 (HiOS 14) கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் அப்டேட் கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
கேமிங் பிரியர்களுக்கான ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஹைப்பர்என்ஜின் 5.0 (HyperEngine 5.0) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டெக்னோ கேமன் 30 5ஜி போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2436 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது.
இந்த மிட்-பிரீமியம் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இந்த டெக்னோ கேமன் 30 5ஜி போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது.
டூயல் கலர் டெம்பரேச்சர் ஃபிளாஷ் (Dual Color Temperature Flash) கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 100 எம்பி ஓஐஎஸ் மோட் (100MP OIS Mode) மற்றும் சூப்பர் நைட் போட்டோகிராபி மோட் (Super Night Photograpy Mode) கிடைக்கிறது. 12 ஜிபி மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது.
இந்த டெக்னோ கேமன் 30 5ஜி போனில் 70W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 10W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speaker), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மட்டுமல்லாமல், ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கிடைக்கிறது. பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்கள் வருகிறது.


Click it and Unblock the Notifications








