Home
Mobile

SAMSUNG விஸ்வரூபம்.. ரூ.20,999 பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் (Flipkart Big Billion Days Sale) வேகன் லெதர் பேனல் மட்டுமல்லாமல், சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) போனானது, நம்ப முடியாத அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இனிமேல் இவ்வளவு கம்மியாக கிடைக்காது என்பதால், விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது.

வேகன் லெதர் பேனல் கொண்ட பிரீமியம் மொபைல் பட்ஜெட்டில் வேண்டுமானால், சாம்சங் பிரியர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி ஆர்டர் செய்து கொள்ளலாம். ஏனென்றால், ரூ.26,999 பட்ஜெட்டில் வெளியான இந்த போன் இப்போது, ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. பீச்சர்களும் பிரீமியமாக பேக் செய்யப்பட்டுள்ளன.

SAMSUNG விஸ்வரூபம்.. ரூ.20,999 பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே!

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F55 5G Specifications): இந்த போனில் சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. நான்கு ஜெனரேஷன் ஓஎஸ் அப்கிரேட் மற்றும் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. மிட்-பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) வருகிறது.

இந்த சாம்சங்கில் பக்காவாக பர்ஃபமென்ஸ் எதிர்பார்க்கும் வகையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. 6.7 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் பேக் செய்திருக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மூன்று மாடல்களிலும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம். டிரிபிள் ரியர் கேமரா உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. மெயின் கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilizyion Technology) வருகிறது. 10x டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். 4K வீடியோ ரெக்கார்டிங், டூயல் ரெக்கார்டிங் (Dual Recording) உள்ளது.

மெயின் கேமராவை போலவே 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. கூடவே டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது. IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்துள்ளது. 5000mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் உள்ளது.

லெதர் பேக் பேனலில் ஆப்ரிகாட் க்ரஷ் மற்றும் ரைசின் பிளாக் கலர்களில் கிடைக்கிறது. ரூ.26,999 பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் வெளியானது. ஆனால், இப்போது வெறும் ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதற்கு எந்தவித பேங்க் கார்டுகளும் தேவையில்லை. ஆகவே, ரூ.6000 விலை குறைப்பில் இந்த பிரீமியம் சாம்சங் போனை வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
27 Percent Discount on SAMSUNG Galaxy F55 5G Flipkart Big Billion Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X