அள்ளிக்கோங்க.. 50எம்பி கேமரா.. 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ரெட்மி 5ஜி போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?
அமேசானில் 4.2 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி (Redmi Note 12 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி, 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது.
குறிப்பாக 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் பர்பிள் நிறம் கொண்ட ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.29,990-விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனுக்கு அமேசான் தளத்தில் (Amazon) 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி போனை ரூ.21,980 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1080x2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 6என்எம் பிராசஸர் (MediaTek Dimensity 1080 6nm processor) வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2.6ஜிகாஹெர்ட் கார்டெக்ஸ்-ஏ78 கோர்ஸ் (2.6GHz Cortex-A78 cores) மற்றும் மாலி-ஜி68 ஜிபியு (Mali-G68 MC4 GPU) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 (Android 12) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த சாதனம். ஆனால் கூடிய விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

இந்த அசத்தலான ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது . எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
5ஜி, 4ஜி எலடிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். குறிப்பாக பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications








