அமேசான் அதிரும் பாருங்க.. 50எம்பி கேமரா.. IP54 ரேட்டிங்.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ரியல்மி நார்சோ என்65 5ஜி (Realme Narzo N65 5G) போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, ஐபி54 ரேட்டிங், டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி நார்சோ என்65 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜபி மெமரி வசதி கொண்ட ரியல்மி நார்சோ என்65 5ஜி போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனுக்கு ரூ.500 கூப்பன் சலுகையும் வழங்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி நார்சோ என்65 5ஜி அம்சங்கள் (Realme NARZO N65 5G Specifications): ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த ரியல்மி நார்சோ என்65 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) கொண்ட ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ என்65 5ஜி போன். மேலும் ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OmniVision OV08D10) சென்சாருடன் 8 எம்பி செல்பீ கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ரியல்மி நார்சோ என்65 5ஜி போன் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கொண்டிருக்கிறது . அதேபோல் 3.5 மிமீ ஆடியோ ஜாக், அல்ட்ரா லீனியர் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்(Ultra Linear Bottom-ported Speaker) கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.
5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி நார்சோ என்65 5ஜி போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் டைப்-சி சார்ஜிங் (USB Type-C Charging), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








