தொக்கா.. ரூ.4,998 விலை குறைப்பு.. திடீர்னு செம்ம டிமாண்ட் ஆகும் புத்தம் புது Realme 5G போன்.. என்ன மாடல்?
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனின் மீது திடீர் விலைக்குறைப்பு (Price Cut) அறிவிக்கப்படும் போது.. "கண்ணா.. ரெண்டாவது லட்டு சாப்பிடணுமா!" என்பது போல் தான் இருக்கும். அப்படியான ஒரு 'மொபைல் ப்ரைஸ் கட்' பற்றிய தொகுப்பே இது! அதென்ன மாடல்? இதோ விவரங்கள்:
கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Realme NARZO 70X 5G) ஸ்மார்ட்போன், தற்போது நம்பமுடியாத தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்கள் என்கிற பட்டியலில் நுழைய வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை வாங்க இதுவே சிறந்த நேரமாகும்.

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) ஆனது ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை 27% தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்கிறது. அதாவது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.13,001 க்கு விற்பனை செய்கிறது. பிளிப்கார்ட் வழங்கும் இந்த பிளாட் தள்ளுபடிகளுடன், சில வங்கி தள்ளுபடிகளும் அணுக கிடைக்கிறது.
அதன்கீழ் ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க ஆக்சிஸ் பேங்க் கார்டுகளை (Axis Bank Card) பயன்படுத்தினால், கூடுதளாக 5% கேஷ்பேக் (5 Percent Cashback) கிடைக்கும். மேலும் இஎம்ஐ விருப்பத்தை (EMI Option) பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இன்னும் கூடுதலாக பணத்தை சேமிக்க முடியும்.

ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி-யின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (1080 x 2400 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், 6ஜிபி வரை ரேம், டைனமிக் ரேம் அம்சம், 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா, 45W சூப்பர்வூக் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் கூடிய விரைவில் ரியல்மி நார்சோ என்65 5ஜி (Realme Narzo N65 5G) ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது மே 28 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியல்மி இந்தியா வலைதளம் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் உறுதி செய்யப்பட்டு விட்டன.

அதன்படி ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். டிசைனை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போனில் பிளாட் டிஸ்பிளே மற்றும் மூன்று பக்கங்களிலும் மெலிதான பெசல்கள் ஆனால் சற்று தடிமனான 'சின்' உள்ளது. செல்பீ கேமராவிற்காக டிஸ்பிளேவின்மேல் மைய பகுதியில் ஹோல்-பஞ்ச் ஸ்லாட் உள்ளது.
இதுதவிர்த்து ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் அம்சத்தையும் (RainWater Touch Feature ) கொண்டிருக்கும். கூடவே தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேடிங்கையும் (IP54 Rating) கொண்டிருக்கும். சிப்செட்டை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 6300 5G SoC) மூலம் இயங்கும்.
கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுருக்கும். இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2டிபி வரையிலான ஸ்டோரேஜையும் ஆதரிக்கும். கடைசியாக இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டிருக்கும்
.
இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களை வைத்து பார்க்கும்போது ரியல்மி நார்சோ என்65 5ஜி மாடலானது முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனின் ரீபேட்ஜ்டு எடிஷனாக இருக்குமென்று தோன்றுகிறது. நினைவூட்டும் வண்ணம் ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,499 க்கு அறிமுகமானது. இதேபோன்ற விலையை நாம் நார்சோ என்65 5ஜி மாடலிலும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








