அடிச்சு புடிச்சு ஆர்டர்.. வெறும் ரூ.24999 போதும்.. SONY கேமரா.. 120X ஜூமிங்.. 5200mAh பேட்டரி.. எந்த மாடல்?
சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, 120X டிஜிட்டல் ஜூமிங், 3X பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி சோனி சென்சார் செல்பீ போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் வெளியான ரியல்மி 13 ப்ரோ பிளஸ் (Realme 13 Pro Plus) போனானது, இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. கேமரா மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 5200mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களில் மிரளவிடுகிறது. இந்த ரியல்மி போனின் விவரங்கள் இதோ.
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 13 Pro Plus Specifications): இந்த ரியல்மியில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 701 (Sony LYT 701) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது.

டெலிபோட்டோ கேமராவில், சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார், 6X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 120X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. சோனி சென்சாருடன் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. சோனி பெரிஸ்கோப் கிடைப்பதால், டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு நிரகான அவுட்புட் எதிர்பார்க்கலாம். இதுபோக ஏஐ கேமரா பீச்சர்களையும் இந்த போன் கொடுக்கிறது.
ஆகவே, ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி (AI Ultra Clarity), ஏஐ ப்யூர் பொக்கெ (AI Pure Bokeh), ஏஐ நேர்ச்சுரல் ஸ்கின் டோன் (AI Natural Skin Tone), ஏஐ ஆடியோ ஜூம் (AI Audio Zoom), ஏஐ குரூப் போட்டோ என்ஹான்ஸ் (AI Group Photo Enhance) மற்றும் ஏஐ ஸ்மார்ட் ரிமூவல் (AI Smart Removal) போன்ற பீச்சர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது, மற்ற பீச்சர்களை பார்ப்போம்.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொண்ட 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

இந்த ரியல்மி போனில் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Octa Core 4nm Snapdragon 7s Gen 2) சிப்செட் இருக்கிறது. இந்த சிப்செட்டுடன் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் உள்ளது.
மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), IP65 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 5200mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த ரியல்மி 13 ப்ரோ பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 32,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.26,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் பெறலாம். ஆகவே, ரூ.24,999 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ள முடியும். இந்த பட்ஜெட்டுக்கு ஓகேவான மாடல்தான்.


Click it and Unblock the Notifications








