ரியல்மி 5ஜி போனுக்கு ஆஃபர் போட்ட பிளிப்கார்ட்.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. 128GB மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 50எம்பி கேமரா, டைமன்சிட்டி, 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி 12எக்ஸ் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி 12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 12x 5G specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி (Full HD+ LCD)டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) சிப்செட் வசதியுடன் ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்தது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்
ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் எல்இடி பிளாஷ், டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 5000mAh பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. பின்பு 45 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் எடை 188 கிராம் ஆகும்..
ட்விலைட் பர்பிள் (Twilight Purple) மற்றும் வுட்லேண்ட் கிரீன் (Woodland Green)நிறங்களில் இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications