Home
Mobile

வெளுக்குது விற்பனை.. ரூ.14,999 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

108எம்பி கேமரா, 12ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 33W சார்ஜிங் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் லுக் கொண்ட போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (POCO X6 Neo 5G) போனானது நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.

12 ஜிபி டைனாமிக் ரேம், டால்பி அட்மோஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் போன்ற மற்ற பீச்சர்களும் பட்ஜெட்டை விட கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வெளுக்குது விற்பனை.. ரூ.14,999 போதும்.. 108MP கேமரா.. 12GB  ரேம் போன்!

போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி அம்சங்கள் (POCO X6 Neo 5G Specifications): இந்த நியோ மாடலில் 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

மேலும், இந்த போக்கோவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் (Corning Gorilla Glass 5 Protection) வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் மிட்-பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு எம்ஐயுஐ 14 (MIUI 14) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி 57 எம்சி 2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது. இந்த பட்ஜெட்டில் பக்காவான டுயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது.

வெளுக்குது விற்பனை.. ரூ.14,999 போதும்.. 108MP கேமரா.. 12GB  ரேம் போன்!

ஆகவே, 108 எம்பி ப்ரொ கிரேடு மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), ஃபிலிம் ஃபில்டர்கள் (Film Filters) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 3x இன்-சென்சார் ஜூமிங் வருகிறது.

அதேபோல ஃபிலிம் ஃபில்டர்கள், போர்ட்ராய்டு, பால்ம் ஷட்டர் போன்ற பீச்சர்களுடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, கேமராவில் பட்ஜெட் பிரியர்களை இந்த போக்கோ போன் தட்டித்தூக்கும்படி இருக்கும். இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி மாடலில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 12 ஜிபி மாடலில் 12 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது. இதுபோக 1 டிபிக்கான ஸ்டோரேஜ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இன்பிராரெட் மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளது. இந்த போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் அஸ்ட்ரல் பிளாக், ஹொரைசன் ப்ளூ மற்றும் மார்ஷியன் ஆரஞ்ச் ஆகிய கலர்கள் கிடைக்கிறது.

இந்த போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 17,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், வெறும் ரூ.15,999 பட்ஜெட்டில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
27 Percent Discount on POCO X6 Neo 5G With 12GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X