Home
Mobile

சரசரவென குறைந்த OnePlus 5ஜி போன் விலை.. 108எம்பி கேமரா.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 108எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்தது. இப்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,519 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கவிட முடியும்.

சரசரவென குறைந்த OnePlus 5ஜி போன் விலை... 108எம்பி கேமரா..எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite 5G specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி வெளிவந்தது. மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது ஸ்னாப்டிராகன் சிப்செட். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 உடன் இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.

அட்ரினோ 619 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner), கேம் ஃபோகஸ் மோட், நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவுடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்ற அசத்தலான வசதியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போன்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

108 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சரசரவென குறைந்த OnePlus 5ஜி போன் விலை... 108எம்பி கேமரா..எந்த மாடல்?

அதேபோல் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 30 நிமிடங்களில் 0 - 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேசமயம் இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, 3.5மிமீ ஆடியோஜாக், ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
27 Percent Discount on OnePlus Nord CE 3 Lite 5G with 8GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X