செய்கைனா இதுதான்.. ரூ.11,849 பட்ஜெட்ல அசூர விற்பனை.. 11GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட்டானது, 11ஜிபி ரேம், 50 எம்பி ஆட்டோபோகஸ் கேமரா, 1 டிபி மெமரி, 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் கொண்ட நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) போனுக்கு கிடைக்கிறது.
அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் (Amazon Great Summer Sale) மிட்-ரேஞ்ச் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட் மாடல்களும் இதுவரையில் கிடைக்காத நம்ப முடியாத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனையில் நோக்கியா ஜி42 5ஜி போனானது, சக்கைப்போடு போட்டு வருகிறது.

நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள் (Nokia G42 5G Specifications): மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 480பிளஸ் 8என்எம் மொபைல் (Octa Core Snapdragon 480+ 8nm Mobile) சிப்செட் இந்த நோக்கியாவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டுள்ளது.
இந்த பட்ஜெட்டிலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. அதேபோல டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டுள்ளது. ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.
இந்த கேமராவில் ஆட்டோபோகஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நைட் மோட் (Night Mode), டார்க் விஷன் (Dark Vision), டிரைபாட் மோட் (Tripod Mode), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), 3டி ஆடியோ ரெக்கார்டிங் (3D Audio Recording) போன்ற பீச்சர்கள் இந்த நோக்கியா ஜி42 5ஜி கேமராவில் வருகின்றன.

ஃஎப்எஃப் (FF) சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரையில், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) பேனல் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கொண்டிருக்கிறது.
8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 2 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி, 11 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இருக்கிறது.
1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது 20W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி 2.0 (USB Type-C 2.0) சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த நோக்கியாவில் IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது.
பட்ஜெட் மாடலென்பதால், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
சோ பர்பிள் (So Purple) மற்றும் சோ கிரோ (So Grey), சோ பிங்க் (So Pink) ஆகிய 3 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,599ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் கிரேட் சம்மர் விற்பனையை முன்னிட்டு ரூ.750 டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








