மிரளுது டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.11000 பட்ஜெட்ல 11GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை (Amazon Great Indian Festival Sale) முன்னிட்டு 11ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட நோக்கியா ஜி42 5ஜி போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள் (Nokia G42 5G Specifications): இந்த நோக்கியா மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 8என்எம் (Octa Core Snapdragon 480+ 8nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டுள்ளது.

அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு இருக்கிறது. இந்த போனில் 6 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 11 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.
அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் இடம் பெற்றுள்ளது. இந்த போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) ஸ்கிரீன் கொண்டுள்ளது.
இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. இந்த நோக்கியா போனில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. அதேபோல சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) இடம்பெற்றுள்ளது. 3.5 மிமீ இயர்போன் ஜாக் (3.5mm Earphone Jack) வருகிறது.
இந்த நோக்கியா மாடலில் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடையாது. இருப்பினும், IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா ஜி42 போனில் ப்ளூடூத் 5.1, வை-பை 802 மற்றும் ஜிபிஎஸ் ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த நோக்கியா மாடலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இதுவொரு ஏஃஎப் (AF) கேமரா மாடலாகும். அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது.
இந்த கேமராவுக்கு ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) சப்போர்ட் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா ஜி42 போன் கிரே (Grey), பிங்க் (Pink) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய 3 கலர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 15ஆம் தேதியில் இருந்து அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டருக்கு கிடைத்து வருகிறது. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் விலை ரூ.12,599ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின்பு, ரூ.11,999ஆக விலை குறைக்கப்பட்டது. இப்போது, இந்த விலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு ரூ.750 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த தள்ளுபடியை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டை (HDFC Bank Credit Card) பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். மிகவும் கம்மியான பட்ஜெட்டில் நல்ல ரேம், பேட்டரி மற்றும் சிப்செட் அம்சங்கள் மட்டுமல்லாமல், பக்காவான குவாலிட்டி கொண்ட போன் வேண்டும் என்றால், இந்த நோக்கியா ஜி42 போன் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








