பிளிப்கார்ட் அதிரும்.. 50எம்பி கேமரா.. 68W சார்ஜிங்.. டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் month end mobile festival எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 50 போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 வரை தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.22749 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50 Specifications): ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Snapdragon 7 Gen 1) சிப்செட் வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ஆனது 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் (Sony LYT-700C primary sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி 3X டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது . மேலும் 32எம்பி செல்பி கேமரா மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் 6.4-இன்ச ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே உடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் சப்போர்ட், 1900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி இதன் டிஸ்பிளேவில் உள்ளது.
MIL-810H இராணுவ சான்றிதழ், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது இந்த போன். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 மாடல். ஜங்கிள் கிரீன் (Jungle Green) மற்றும் பான்டோன் பீச் ஃபஸ் (Pantone Peach Fuzz) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 போன்.
குறிப்பாக 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன.
மேலும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11ax), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C), என்எப்சி ( NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா போனில் உள்ளன.
photo credit: sulpak.kz


Click it and Unblock the Notifications








