பிளிப்கார்ட் மிரளுது.. வெறும் ரூ.7599 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. AI கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே, ஏஐ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் மற்றும் மேட் பினிஷிங் பேனல் கொண்ட மோட்டோ ஜி04 (Moto g04) போன் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.
மோட்டோ ஜி04 விலை (Moto g04 Price): இந்த மோட்டோ போன், அறிமுகமான போது, இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. மேட் பினிஷிங் பேனல் (Matte Finish Panel) டிசைனில் சீ கிரீன் (Sea Green), கார்கார்ட் பிளாக் (Concord Black), சாடின் ப்ளூ (Satin Blue) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
மோட்டோ ஜி04 அம்சங்கள் (Moto g04 Specifications): இந்த போனில் பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) கொண்ட 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 537 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
இந்த போனின் 4 ஜிபி ரேம் வேரியண்ட்டில் கூடுதலாக 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் கூடுதலாக 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் வருகிறது. இந்த 2 வேரியண்ட்களுக்கும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரூ.8000 பட்ஜெட்டுக்குள் கிடைப்பதால், ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் வருகிறது. இதுவொரு 4ஜி சிப்செட் மாடலாகும். இருப்பினும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுக்கப்பட்டிருப்பது, மார்கெட்டை மிரள விட்டுள்ளது.
இந்த மோட்டோவானது, ஏஐ பவர்ட் டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera System) கொண்டுள்ளது. ஆகவே, 16 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் வருகிறது. 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராக்களில் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் (FHD Video Recording) சப்போர்ட் வருகிறது.
இந்த மோட்டோ ஜி04 போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் (USB Type-C Charging), டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot), மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் சிங்கிள் ஸ்பீக்கர் (Single Speaker) வருகிறது. இந்த ஸ்பீக்கரில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது.
மேலும், சைடு பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-facing Fingerprint Sensor) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிடி (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.0 (Bluethooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது.
இந்த மோட்டோ ஜி04 போனில் 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த மோட்டோவின் 8 ஜிபி ரேம் மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் ரூ.400 கேஷ் பேக் மற்றும் ரூ.5,200 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, இந்த போனை ரூ.7,599 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








