Home
Mobile

இதுக்கு மேல குறைக்க முடியாது.. 50எம்பி கேமரா.. 6ஜிபி ரேம்.. ஆஃபரில் Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G) ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்க முடியும். குறிப்பாக 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் வெளிவந்தது. இப்போது லாவா பிளேஸ் 2 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,169 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை மிகவும் கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

இதுக்கு மேல குறைக்க முடியாது..  ஆஃபரில் Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

லாவா பிளேஸ் 2 5ஜி அம்சங்கள் (Lava Blaze 2 5G Specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (HD+ Display) கொண்டுள்ளது லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh rate), 720x1600 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 ( MediaTek Dimensity 6020) சிப்செட் உடன் இந்த லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த புதிய லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி மெயின் கேமரா + 0.08 மெகாபிக்சல் செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரியை (5000mAh Battery) கொண்டுள்ளது லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவும் (18W Fast Charging Support) உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

5ஜி, 4ஜி, ப்ளூடூத், எஃப்எம் ரேடியோ, வைஃபை 802.11 பி/ஜி/என்/ஏசி, ஓடிஜி, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் எடை 203 கிராம் ஆகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
27 Percent Discount on Lava Blaze 2 5G With 50MP Camera in Amazon Sale check specs, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X