Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.6,569 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. AI கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே அதிரும்படியான பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, ஏஐ கேமரா, ஐபிஎஸ் டிஸ்பிளே, 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் ஐடெல் பி40 பிளஸ் (itel P40 Plus) போனானது, அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் கிடைக்கிறது. விவரம் இதோ.

பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்கள் பெரும்பாலும் பக்காவான பேட்டரி மற்றும் சிப்செட் பீச்சர்களை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். கேமரா, டிஸ்பிளே பீச்சர்களில் எந்த எதிர்பார்ப்பும் காட்ட மாட்டார்கள். ஆனால், ஐடெல் பி40 பிளஸ் போன் அனைத்திலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. முழு பீச்சர்களை பார்த்துவிட்டு விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

பொளக்குது விற்பனை.. ரூ.6,569 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. AI கேமரா போன்!

ஐடெல் பி40 பிளஸ் அம்சங்கள் (itel P40 Plus Specifications): இந்த ஐடெல் மாடலில் ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் வருகிறது. ஆகவே, மீடியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மாலி ஜி57 எம்பி1 (Mali-G57 MP1) கிராபிக்ஸ் வருகிறது.

13 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் ஏஐ சப்போர்ட் வருகிறது. இந்த ஐடெல் பி40 பிளஸ் போனில் மீடியம் அவுட்புட் கொண்ட பஞ்ச்-ஹோல் (Punch-Hole) டிஸ்பிளே வருகிறது.

6.8 இன்ச் (720 x 1640 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் பேனல் கொண்டுள்ளது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) மாடலாகும். 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

பொளக்குது விற்பனை.. ரூ.6,569 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. AI கேமரா போன்!

இந்த ரூ.6000 பட்ஜெட்டிலும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனிலேயே மிரளவிடும் பீச்சராக பேட்டரி சிஸ்டம் இருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி (Type-C) சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி வருகிறது.

இந்த பட்ஜெட்டில் நம்ப முடியாத பேட்டரி பேக்கப் எதிர்பார்க்கலாம். டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது. இந்த ஐடெல் பி40 பிளஸ் போனில் ஜி சென்சார் (G Sensor) மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) வருகிறது. அதேபோல பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டிருக்கிறது. எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளதால், டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொண்டுள்ளது. ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) வருகிறது.

அதேபோல வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன. ஃபோர்ஸ் பிளாக் (Force Black) மற்றும் ஐஸ் சியான் (Ice Cyan) ஆகிய 2 கலர்களில் இந்த ஐடெல் மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஐடெல்லின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,299ஆக இருக்கிறது.

இப்போது, அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த ஐடெல் பி40 பிளஸ் போனை வெறும் ரூ.6,569 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
27 Percent Discount on itel P40 Plus With 7000mAh Battery in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X