மார்கெட் காலி.. வெறும் ரூ.14,999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. 16GB ரேம்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான அடிமட்ட விலையில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன், சோனி சென்சார் மெயின் கேமரா, 5500mAh பேட்டரி, 45W சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி (Infinix Note 50s 5G) கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட் கொண்ட இந்த போனின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
144Hz ரெஃப்ரெஷ் ரேட், 90FPS கேமிங் அவுட்புட் கொண்ட டிஸ்பிளே போன்களில் அடிமட்ட விலைக்கு இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி கிடைக்கிறது. 3டி கர்வ்ட் அமோலெட் பேனலுடன் 7.6 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிம் டிசைன் கொண்ட மாடல்களையும் தூக்கிசாப்பிட்டு இருக்கிறது. இப்படி ஒட்டுமொத்த பீச்சர்களும் மிரளவிடுகின்றன.

இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 50s 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. 90FPS கேமிங் அவுட்புட் மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்காதபடி ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா (Octa Core 4nm MediaTek Dimensity 7300 Ultimate) கிடைக்கிறது. ப்ளோட்டிங் விண்டோ, டைனாமிக் பார் போன்ற பிரத்யேக பீச்சர்கள் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் ( FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த மிட்-ரேஞ்ச் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) மட்டுமல்லாமல், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கும் 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் பூஸ்ட் கொடுக்கிறது. அதோடு 2 ஸ்டோரேஜ் மாடல்கள் கிடைக்கின்றன.
ஆகவே, இந்த இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன. பிரீமியம் லுக்கில் கேமரா பம்ப்
டிசைன் கிடைக்கிறது. 64 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்682 சென்சார் வருகிறது. இதற்கு 2 எம்பி செகண்டரி கேமரா மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் சப்போர்ட் 5500mAh பேட்டரி வருகிறது. வீகன் லெதர் பேனல் டிசைனில் மரைன் டிரிஃப்ட் ப்ளூ (Marine Drift Blue) கலர் கிடைக்கிறது. இதுபோக டைட்டானியம் கிரே (Titanium Grey) மற்றும் ரூபி ரெட் (Ruby Red) ஆகிய 2 கலர்கள் இருக்கின்றன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆக உள்ளது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ,17,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டர் செய்தால், ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் போக வாங்கி கொள்ளலாம். அதுவே ஈஎம்ஐ மூலம் வாங்கினால், ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,999 பட்ஜெட்டில் இப்போது வாங்க முடியும்.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications








