வெளுக்குது விற்பனை.. வெறும் ரூ.14499 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 108 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை பட்ஜெட்டில் கவர் செய்துள்ள இன்பினிக்ஸ் நோட் 40 எக்ஸ் 5ஜி (Infinix Note 40X 5G) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. பிரீமியம் லுக்கில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த போனின் முழு பீச்சர்கள் மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி விலை (Infinix Note 40X 5G Price): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆகவும் இருக்கிறது. இதில் 12 ஜிபி ரேம் மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் முழுதாக ரூ.1,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI) மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு (Axis Bank Credit Card) இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, வெறும் ரூ.14,499 பட்ஜெட்டில் இந்த இன்பினிக்ஸ் போனை வாங்கி கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், ரூ.8,550 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது.
இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 40X 5G Specifications): இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை பேக் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 6.78 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். மேலும், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

லேட்டஸ்ட் இன்பினிக்ஸ் மாடல்களில் வரும் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் கொண்டிருக்கிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் (12 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் வருகிறது.
இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போனில் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + ஏஐ லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. பட்ஜெட்டில் வருவதால், 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது. இருப்பினும், ரியர் கேமராவில் குவாட் எல்இடி ஃபிளாஷ் பேக் செய்யப்பட்டுள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) சென்சார் மற்றும் IP52 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. அதேபோல டிடிஎஸ் சவுண்ட் (DTS Sound), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) உள்ளன. இந்த இன்பினிக்ஸ் போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.
டைப்-சி சார்ஜிக் போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black), லைம் கிரீன் (Lime Green) மற்றும் பால்ம் ப்ளூ (Palm Blue) ஆகிய 3 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 8.6 மிமீ தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கும். பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம் வேண்டுமானால், இந்த மாடல் சரியான ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








