ஆர்டர் பிச்சிக்குது.. பட்ஜெட்ல 200MP கேமரா.. QUAD டிஸ்பிளே.. 66W சார்ஜிங்.. எந்த போன்?
200 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிரளவிடும் அம்சங்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் டிசைன் கொண்ட ஹானர் 90 5ஜி (HONOR 90 5G) போனுக்கு அமேசானில் நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது.
ஹானர் 90 5ஜி அம்சங்கள் (HONOR 90 5G Specification): இந்த ஹானர் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) சப்போர்ட் வருகிறது. இந்த ஹானர் போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 8 ஜிபி வேரியண்ட்டில் 5 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது.
அதேபோல 12 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 7 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொண்டிருக்கிறது. இந்த போனானது, 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளேவாகும்.
இந்த டிஸ்பிளேவில் 360Hz டச் சாம்பிளிங் ரேட், டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹானரில் பிரம்மாண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

ஆகவே, 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இந்த டெப்த் கேமராவில் மேக்ரோ சப்போர்ட் உள்ளது. அதேபோல 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 10x டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.
அதோடு மூவிங் போட்டோ (Moving Photo), ஏஐ போட்டோகிராபி (AI Photography), சூப்பர் வைடு ஆங்கிள் (Super Wide Angle), மல்டி வீடியோ (Multi-Video), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற கேமரா பீச்சர்கள் கொண்டிருக்கிறது. மேலும் ஈஎஸ்ஐ (EIS) டெக்னாலஜி கொண்டுள்ளது.
இந்த ஹானர் 90 போனில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ சப்போர்ட் வருகிறது. மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்த போன் அறிமுகமான போது, இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.36,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ஹானர் டேஸ் விற்பனையை (HONOR Days Sale) முன்னிட்டு, இதுவரை கிடைக்காத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, முழுதாக ரூ.3,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். இதுபோக ரூ.33,249 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, 200 எம்பி கேமரா கொண்ட இந்த ஹானர் 90 5ஜி போனை வெறும் ரூ.31,999 விலைக்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








