SALE வெளுத்து கட்டுது.. ரூ.3500 விலை குறைப்பு.. ரூ.14,499-க்கு வந்த CMF போன்.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா!
சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், 2 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடத்துக்கான செக்யூரிட்டி அப்கிரேட்களை பட்ஜெட் விலையில் கொடுத்த சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடலுக்கு இப்போது, ரூ.3,500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. விலை குறைப்பு மட்டுமல்லாமல், பேங்க் டிஸ்கவுண்ட் போக அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த சிஎம்எப் போன் 1 மாடலின் பீச்சர்கள், விலை, விற்பனை விவரங்கள் இதோ.
சிஎம்எப் போன் 1 அம்சங்கள் (CMF Phone 1 Specifications): இந்த சிஎம்எப் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு நத்திங் ஓஎஸ் 2.6 (Nothing OS 2.6) கிடைக்கிறது. 2 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். 5ஜி பர்ஃபாமென்ஸ் கொண்ட 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் 7300 (4nm Octa Core MediaTek Dimensity 7300) வருகிறது.

இந்த பட்ஜெட்டில் டிஸ்பிளேவில் பின்னிப்பெடல் எடுக்கும்படி 6.67 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 960Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
ஓடிடி பிரியர்கள் எதிர்பார்க்கும்படி எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சிஎம்எப் போன் 1 மாடலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த வேரியண்ட்களில் கூடுதல் ஸ்டோரேஜ் பெறுவதற்கு 2 டிபிக்கான மெமரி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம்.
ரூ.15,000 பட்ஜெட்டில் குறை சொல்ல முடியாதபடி சென்சாருடன் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, இந்த சிஎம்எப் போன் 1 மாடலில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கிடைக்கிறது. இதுபோக 16 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்துள்ளது.
33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் வேகன் லெதர் மற்றும் ஸ்டான்டர்ட் பேக் பேனல் கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. இந்த சிஎம்எப் போனில் IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. பாட்டம்-பேர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) மற்றும் டைப்-சி ஆடியோ (Audio) கிடைக்கிறது.
இந்த சிஎம்எப் போன் 1 மாடலில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக இருந்தது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.15,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு மட்டுமல்லாமல் கூடுதலாக ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ஆகவே, ரூ.14,499 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போனை பிளாக் (Black), ப்ளூ (Blue), லைட் கிரீன் (Light Green) மற்றும் ஆரஞ்ச் (Orange) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். நத்திங் மாடல்களை போல டிரான்ஸ்பரன்ட் டிசைன் பட்ஜெட்டில் வேண்டுமானால், இந்த சிஎம்எப் போன் 1 மாடலை கஸ்டமர்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications