அவ்ளோ தானா.. வெறும் ரூ.11,749 போதும்.. 5200mAh பேட்டரி.. 12GB ரேம்.. 50MP கேமரா.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அடிமட்ட பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களை களமிறக்குவதில் அல்காடெல் என்னும் புதிய நிறுவனம் இடம்பிடித்து இருக்கிறது. இந்த நிறுவனத்தின் அல்காடெல் வி3 கிளாசிக் 5ஜி (Alcatel V3 Classic 5G) போனானது, நம்ப முடியாத அடிமட்ட விலைக்கு 5200mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம், 50 எம்பி மெயின் கேமரா போன்ற பீச்சர்களை பேக் செய்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் கொடுக்கும் இந்த அல்காடெல் போனின் முழு விவரங்கள் இதோ.
அல்காடெல் வி3 கிளாசிக் 5ஜி அம்சங்கள் (Alcatel V3 Classic 5G Specifications): இந்த அல்காடெல் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஸ் (Android 15 OS) மற்றும் 3 ஜெனரேஷன் ஓஸ் அப்டேட் கிடைக்கிறது. அதேபோல 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் வருகிறது. இந்த அப்டேட்களை பட்ஜெட் மாடல்களில் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், இந்த அல்காடெல் மாடலில் கிடைக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் அந்த பர்ஃபாமென்ஸ்-க்கு ஏற்ப ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டை விட கூடுதலாக பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) பேனல் கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2.5D கிளாஸ் டிசைன் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 8 விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. 128 ஜிபி மெமரி வருகிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. கூடுதல் மெமரி சப்போர்ட் உள்ளது.
ஆகவே, 2 மாடல்களிலும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. இந்த அல்காடெல் வி3 கிளாசிக் 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 0.08 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் பஞ்ச்-ஹோல் டிசைன் (Punch Hole Design) வருகிறது.
இந்த கம்மியான பட்ஜெட்டிலும் பக்கா பேக்கப் கொடுக்கும்படி 5200mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வருகிறது. சொல்லப்போனால், இந்த பட்ஜெட்டுக்கு 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால், இந்த அல்காடெல் வி3 கிளாசிக் 5ஜி போனில் கூடுதல் சார்ஜிங் கிடைக்கிறது.
டைப்-சி சார்ஜிங் கிடைக்கிறது. ஆனால், டைப்-சி ஆடியோ கிடையாது. ஆகவே, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இந்த அல்காடெல் வி3 கிளாசிக் 5ஜி விலை எப்படி?
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.1,250 டிஸ்கவுண்ட் போக ரூ.11,749 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications