6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. பிரபலமான Samsung போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?
சியோமி, விவோ, ஒப்போ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சாம்சங் நிறுவனம். குறிப்பாக சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிரபலமான சாம்சங் போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்13 (Samsung Galaxy M13) ஸ்மார்ட்போனுக்கு தற்போது 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் முன்பு ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த போனை ரூ.10,999-க்கு வாங்க முடியும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்13 6.6-இன்ச் ஃபுல் எச்டி + (FHD+) இன்பினிட்டி-வி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்13 போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்13 போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த எக்ஸிநோஸ் 850 (Exynos 850) சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 (Android 12) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 15W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அக்வா கிரீன், மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கைரேகை ஸ்கேனர், ஆட்டோ டேட்டா ஸ்விட்ச்சிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கம்மி விலையில் ஒரு நல்ல 4ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 போனை வாங்குவது நல்லது. அதேபோல் சாம்சங் நிறுவனம் விரைவில் பல அசத்தலான போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications








