Home
Mobile

எல்ஜியின் பிளாக் vs நெட் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு

By Super
எல்ஜியின் பிளாக் vs நெட் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு
சாதாரண ரகம், நடுத்தர ரகம் என இரண்டு மொபைல்போன் செக்மென்டிலும் எல்ஜி குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. நடுத்தர ஸ்மார்ட்போன் செக்மென்டில் எல்ஜி போன்களுக்கு தனி மவுசு இருக்கிறது. இதை கவனத்தில்க்கொண்டு எல்ஜி அறிமுகப்படு்த்திய ஆப்டிமஸ் பிளாக் நடுத்தர ஸ்மார்ட்போன் மற்றும் விரைவில் வர இருக்கும் எல்ஜி நெட் சாதாரண ரக ஸ்மார்ட்போன் ஆகியவற்றின் சிறப்பம்சங்களை இன்று பார்ப்போம்.

எல்ஜி பிளாக் நடுத்தர ஸ்மார்ட்போன் ரகத்தையும், நெட் சாதாரண ரக ஸ்மார்ட்போன் ரகத்திலும் சேர்ந்துகொள்கிறது. எவ்ஜி நெட்டில் 3.4 இஞ்ச் தொடுதிரையும், எல்ஜி ஆப்டிமஸ் பிளாக்கில் 4.0 இஞ்ச் தொடுதிரையையும் கொண்டுள்ளது.

இரண்டிலும் ஆற்றல்வாய்ந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பிளாக்கில் 5 மெகாபிக்செல் கேமராவும், நெட்டில் 3.2 மெகாபிக்செல் கேமராவும் இருக்கிறது. தவிர, எல்ஜி ஆப்டிமஸ் பிளாக்கில் வீடியோ சாட்டிங் வசதிக்காக 2 மெகாபிக்செல் கேமராவும், 720பி வீடியோ ரெக்கார்டிங் வசதியும் உள்ளது. நெட் ஸ்மார்ட்போனில் முகப்பு கேமரா இல்லை.

மல்டிமீடியா வசதிகளை பார்க்கும்போது இரண்டிலும் பொதுவான அம்சங்கள் இருப்பதை உணர்கிறோம். இரண்டு போன்களும் ஆடியோ, வீடியோ சப்போர்ட், வீடியோ ப்ளேபேக் உள்ளிட்ட வசதிகளும், அனைத்து பார்மெட்டுகளிலும் ஆடியோ பைல்களை இயக்கும் திறனையும் பெற்றுள்ளன. ஆர்டிஎஸ் கொண்ட எப்எம் ரேடியோ 3.5 மிமீ யுனிவர்சல் ஆடியோ ஜாக் ஆகியவையும் உண்டு. இரண்டு போன்களிலும் 32ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ள முடியும்.

இரண்டு போன்களிலும் வைஃபை, புளூடூத், யுஎஸ்பி பிசி சிங், ஜிபிஆர்எஸ், எட்ஜ் மற்றும் அதிவேக 3ஜி இன்டர்நெட் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளன. ஆனால், தகவல்பரிமாற்ற வேகத்தில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

எல்ஜி ஆப்டிமஸ் பிளாக் 10 எம்பிபிஎஸ் வேகத்திலும், எல்ஜி ஆப்டிமஸ் நெட் 3எம்பிபிஎஸ் வேகத்திலும் தகவல் பரிமாற்றத்தை வழங்குகின்றன. எல்ஜி ஆப்டிமஸ் பிளாக்குக்கு ரூ.18,600 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நெட் ஸ்மார்ட்போனின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது, ரூ.12,000 விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு போன்களும் அதனதன் ரகங்களில் தேர்வு செய்ய சிறப்பான காரணங்களை கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X