Home
Mobile

ரூ.6,999க்கு 3ஜி ஆன்ட்ராய்டு போன்: கார்பன் அறிவிப்பு

By Super
ரூ.6,999க்கு 3ஜி ஆன்ட்ராய்டு போன்: கார்பன் அறிவிப்பு
டெல்லி: ரூ.6,999 விலையில் 3ஜி தொழில்நுட்பத்துடன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம கொண்ட போனை அறிமுகப்படுத்த இருப்பதாக கார்பன் மொபைல்ஸ் அறிவித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இந்திய மொபைல்போன் மார்க்கெட் நோக்கியா, சோனி எரிக்ஸன், சாம்சங் போன்ற வெளிநாட்டு கட்டுப்பாட்டில் இருந்தன. இவற்றை தொடர்ந்து, எல்ஜி, மோட்டோரோலா, எச்டிசி ஆகிய அயல்நாட்டு நிறுவனங்கள் மார்க்கெட்டை பங்குபோட்டன.

ஆனால், இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் குறைந்த விலை அஸ்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு கார்பன், மேக்ஸ், மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்கள் தலைதூக்கின. கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட்டையும் தம் பக்கம் திருப்பின.

ஆனால், ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் இன்றளவும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன் மார்க்கெட்டிலும் குறிப்பிட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியை கார்பன் மொபைல்ஸ் துவங்கியுள்ளது.

ரூ.6,999க்கு 3ஜி தொழில்நுட்பத்துடன் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட போனை அறிமுகப்படுத்தப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போன் ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக வர இருப்பதாக கார்பன் மொபைல்ஸ் தெரிவித்துள்ளது.

இதனால், பல வெளிநாட்டு, உள்நாட்டு மொபைல்போன் நிறுவனங்களுக்கு தற்போதே கிலி பிடித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்தால், இந்தியாவின் குறைந்த விலை ஆன்ட்ராய்டு போன் என்ற பெருமையையும் பெறும்.

இந்த போனுடன் புதிதாக 4 போன்களையும் அறிமுகப்படுத்த கார்பன் திட்டமிட்டுள்ளது. இதற்காக, டெல்லி மற்றும் பெங்களூர் வடிவமைப்பு மையங்களை தரம் உயர்த்தும் முயற்சிகளை கார்பன் மேற்கொண்டுள்ளது.

குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு போனை அறிமுகப்படுத்தப் போவதாக கார்பன் அறிவித்துள்ளதால், மேக்ஸ், மைக்ரோமேக்ஸ், ஸ்பைஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இதேபோன்று குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என கருதப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X