Home
Mobile

வைமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் எச்டிசி ஸ்மார்ட்போன்

By Super
வைமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் எச்டிசி ஸ்மார்ட்போன்
டெல்லி: ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கலக்கி வரும் எச்டிசி நிறுவனம், அடுத்து வைமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய போனை விற்பனைக்கு கொண்டு வருகிறது.

'எச்டிசி இவோ வை-மேக்ஸ் ஐஎஸ்டபிள்யூ 11 எச்டி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போன் இன்டர்நெட் பயன்படுத்துவோருக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டயல் அப் மற்றும் பிராண்டுபேண்டு இன்டெர்நெட் இணைப்புகளை விஞ்சும் வகையில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல்பரிமாற்றங்களை கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடிக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

டயல் அப் மற்றும் பிராண்டுபேண்டுகளை விஞ்சும் வகையில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல்பரிமாற்றங்களை கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடிக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

இன்டர்நெட் பயன்பாடு, சினிமா, வீடியோ கிளிப்ஸ் மற்றும் புகைப்படங்களை டவுன்லோடு செய்வதாகட்டும், அனைத்திலும் படுவேகத்தை காட்டுகிறது இதில் அப்லோடு செய்யப்பட்டுள்ள வை-பை தொழில்நுட்பம்.

தவிர, லேப்டாப் மற்றும் வீடியோ கேம்ஸ் கருவிகளுடன் இதில் உள்ள வை-பை கனெக்டிவிட்டியை கொடுக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

இதில், தேவையான அளவு மல்டிமீடியா பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட சாப்ட்வேர் மற்றும் மியூசிக், வீடியோ பிளேயர் என அனைத்து வசதிகளையும் கொடுக்கிறது.

எச்263 மற்றும் எச் 264 வீடியோ பார்மெட்டுகளையும் இயக்க முடியும். இதில், 4.3 இஞ்சி கொண்ட எல்சிடி திரை நமக்கு புதிய ஸ்மார்ட்போன் அனுபவத்தை கொடுக்கிறது.

8. மெகா பிக்செல் கேமரா, 720 பி வீடியோ ரெக்கார்டிங் மற்றும் இதிலுள்ள எச்டிஎம்ஐ போர்ட் மூலம் டிவிக்களுடன் இணைத்து சினிமா மற்றும் வீடியோக்களை பார்க்கலாம் என்பது கூடுதல் விஷேசம்.

எச்டிசி இவோ வைமேக்ஸ் ஐஎஸ்டபிள்யூ 11 எச்டி ஸ்மார்ட்போன் சமீபத்தில் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு வை-மேக்ஸ் இன்டர்நெட் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது அனேகமாக ரூ.36,000 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X