Home
Mobile

மிரட்டி விட்டாப்ல.. 26 சதவீத ஆஃபரில் OnePlus.. 9000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. 9000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, சோனி கேமரா கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

இப்போது, அமேசான் தளத்தில் 26 சதவீத தள்ளுபடியுடன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.38,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.2,000 தள்ளுபடியை தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ரூ.36,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது.

மிரட்டி விட்டாப்ல.. 26 சதவீத ஆஃபரில் OnePlus.. 9000mAh பேட்டரி!

ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள் (OnePlus Nord 6 Specifications): அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

6.78 இன்ச் ( 2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட மாடலாகவும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் இருக்கிறது. கிரிஸ்டல் குவார்டு கிளாஸ் (Crystal Guard Glass) புரொடெக்சன் மற்றும் 3840Hz PWM டிம்மிங் கொண்டுள்ளது.

பிரீமியம் டியூரபிலிட்டி ரேட்டிங் கொடுத்துள்ளது. ஆகவே, இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் IP66 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் கிடைக்கிறது. கூடுதலாக IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சோனி எல்ஒய்டிஐஏ 600 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் ஓம்னிவிஷன் ஓவி08எப் (OmniVision OV08F) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 32 எம்பி செல்பீ கேமராவை இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த கேமராவில் ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow) கிடைக்கிறது.

மேலும், ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ அன்பிளர் (AI Unblur), ஏஐ பெர்பெக்ட் ஷாட் (AI Perfect Shot), ஏஐ ரெஃப்ளெக்சன் ரீமூவர் (AI Reflection Remover) உள்ளிட்ட பீச்சர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஏஐ மைண்ட் ஸ்பேஸ் (AI Mind Space) மற்றும் கூகுள் ஜெமினி இன்டிகிரேஷன் கிடைக்கிறது. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

9000mAh பேட்டரியை இந்த நோர்ட் 6 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. பெரிய பேட்டரியாக இருப்பதால், 27W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், கேமிங் பிரியர்களுக்காக கொடுக்கப்பட்டும் பைபாஸ் சார்ஜிங் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சாரும் உள்ளது.

4 மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. குயிக் சில்வர் (Quick Silver), ஃபிரஷ் மிண்ட் (Fresh Mint) மற்றும் பிட்ச் பிளாக் (Pitch Black) ஆகிய கலர்களில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். MIL-STD-810H ஸ்டான்டர்டு மிலிட்டரி கிரேடு புரொடெக்சனை கொடுத்துள்ளது.

Best Mobiles in India

English summary
26 Percent Offer on OnePlus Nord 6 With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X