Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.9999 பட்ஜெட்ல SONY கேமரா.. 48MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களே மூக்கில் விரல் வைக்கும்படியான கம்மி விலையில் சோனி சென்சார் கேமரா, 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பக்கா பீச்சர்களை பேக் செய்துள்ள இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) போனின் விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் டிஸ்கவுண்ட் உடன் தொடங்கி இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனின் பீச்சர்கள் மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி அம்சங்கள் (Infinix Hot 50 5G Specifications): இந்த போனின் டிசைன் பக்கா பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டில் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) சென்சார் கொண்ட 48 எம்பி மெயின் கேமரா + டெப்த் சென்சார் + AI லென்ஸ் இடம் பெற்றுள்ளது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.9999 பட்ஜெட்ல SONY கேமரா மாடல்!

அதேபோல 8 செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனில் 6.7 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. மேலும், ஸ்மார்ட்நோட்பிகேஷன்களுக்காக டைனாமிக் போர்ட் (Dynamic Port) சப்போர்ட் வருகிறது.

ரூ.10000 பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 14.5 (XOS 14.5) பேக் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் மீடியம் கேமிங் அவுட்புட் கொண்ட ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

மேலும், இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சிலாட் கொண்ட 2 ரேம் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இதுபோக 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (8GB Virtual RAM) சப்போர்ட் வருகிறது. மேலும், பட்ஜெட் போன்களில் கிடைக்கும் வழக்கமான சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் IP54 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது.

ஸ்லிம் டிசைனில் 7.82 எம்எம் தடிமன் வருகிறது. 188 கிராம் எடை உள்ளது. 5ஜி மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி வருகிறது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனில் வைபரென்ட் ப்ளூ (Vibrant Blue), ஸ்லீக் பிளாக் (Sleek Black), சேஜ் கிரீன் (Sage Green) மற்றும் ட்ரீமி பர்பிள் (Dreamy Purple) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999 ஆக இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999 ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.1000 டிஸ்கவுண்ட் உடன் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் மாடலை ரூ.9999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
26 Percent Dsicount on Infinix Hot 50 5G With 48MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X