அசூர விற்பனை.. வெறும் ரூ.9,598 போதும்.. 7000mAh பேட்டரி.. 7GB ரேம்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் யாரும் கொடுக்க முடியாத பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 7ஜிபி ரேம், ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா போன்ற அம்சங்களுடன் டெக்னோ போவா 3 (TECNO POVA 3) போன் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
டெக்னோ போவா 3 அம்சங்கள் (TECNO POVA 3 Specifications): இந்த டெக்னோ போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு டாட்-இன் டிஸ்பிளே (Dot-in Display) மாடலாகும். ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) பேனல் கொண்டிருக்கிறது.

இந்த டெக்னோ போனில் ஆண்ட்ராய்டு 11 ஓஸ் (Android 11) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (Octa Core MediaTek Helio G88 12nm) சிப்செட் வருகிறது. அதோடு ஹய்ஓஎஸ் (HiOS) மற்றும் ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த மாடலில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த 4 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 3 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது. அதேபோல 6 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 5 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது.
அதோடு 256 ஜிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் நானோ சிம் (Dual Nano SIM) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) கொண்டிருக்கிறது. இந்த போன் மிகவும் கம்மி பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டாலும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதோடு குவாட் எல்இடி பிளாஷ் (Quad LED Flash) இடம் பெற்றுள்ளது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு பியூட்டி, எச்டிஆர் மோட், 4K டைம் லேப்ஸ் போட்டோகிராபி போன்ற பீச்சர்கள் வருகின்றன.
அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னோ போனானது, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டிருக்கிறது. அதோடு டிடிஎஸ் (DTS) டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன. அதேபோல 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் எப்எம் ரோடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டெக்னோ போவா 3 மாடலில் பிரம்மாண்ட பேட்டரி சிஸ்டம் வருகிறது. அதாவது, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியோடு பேக்கப்பில் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த பேட்டரி தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கக்கூடியது. அதேபோல 8 மணி நேர கேம்பிளே பேக்கப் தரக்கூடியதாகும்.
இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த போன் எலக்ட்ரிக் ப்ளூ (Electric Blue), டெக் சில்வர் (Tech Silver) மற்றும் ஈகோ பிளாக் (ECO Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 11,499ஆகவும், 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.12,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன்பின் 4 ஜிபி மாடலின் விலை ரூ.10,598ஆக குறைக்கப்பட்டது. இப்போது, இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை கனரா பேங் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த போனை வெறும் ரூ.9,598க்கு வாங்கிகொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








