Home
Mobile

SAMSUNG-க்கு கும்பிடு.. ரூ.30,610 ரேட் கட்ல ULTRA போன்.. 200MP கேமரா.. 12GB ரேம்.. QUAD டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களும் அந்த நிறுவனத்துக்கு கும்பிடு போடும்படியான விலை குறைப்பில் குவாட் எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 200 எம்பி மெயின் கேமரா, 45W சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) போனுக்கு கிடைக்கிறது. டிஸ்பிளே, கேமரா, சிப்செட், பேட்டரி போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுக்கும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனை இப்போது ரூ.30,610 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S24 Ultra Specification): இந்த பிரீமியம் போனில் குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.8 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா ஆர்மோர் (Corning Gorilla Armor) புரொடெக்சன் கிடைக்கிறது.

SAMSUNG-க்கு கும்பிடு.. ரூ.30,610 ரேட் கட்ல ULTRA போன்.. 200MP கேமரா!

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் பிளாட் எட்ஜ் டிசைன் கொடுக்கிறது. 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் 7 ஓஎஸ் அப்டேட்கள் வருகிறது. ஒன்யுஐ 6.1 (OneUI 6.1) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740) கிடைக்கிறது.

பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 4என்எம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (4nm Octa Core Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் கிடைக்கிறது. கேலக்ஸி ஏஐ (Galaxy AI) மூலம் சர்க்கிள் டூ சர்ச்ச், லைவ் டிரான்ஸ்லேட், இன்டர்பிரிடர், நோட் அசிஸ்ட், போட்டோ அசிஸ்ட் மற்றும் சாட் அசிஸ்ட் போன்ற ஏஐ பீச்சர்களை இந்த சாம்சங் போன் கொடுக்கிறது.

200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேலும், 10 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 8K வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. 100எக்ஸ் ஸ்பேஸ் ஜூமிங் (Space Zooming) மற்றும் 10X ஆப்டிகல் டிஜிட்டல் கொடுக்கிறது.

ஆட்டோ போகஸ் மற்றும் அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வேப்பர் சேம்பர் (Vapor Chamber) சப்போர்ட் கிடைக்கிறது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.1,29,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் நேரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் இல்லாமலேயே ரூ.99,389 விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.30,610 விலை குறைப்பில் இப்போது இந்த சாம்சங் போனை வாங்கி கொள்ளலாம்.

இதுபோக ரூ.2,982 மதிப்பில் பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.62,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. டைட்டானியம் கிரே (Titanium Gray), டைட்டானியம் ப்ளூ (Titanium Blue), டைட்டானியம் பிளாக் (Titanium Black), டைட்டானியம் கிரீன் (Titanium Green) மற்றும் டைட்டானியம் வயலட் (Titanium Violet) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
26 Percent Discount on Samsung Galaxy S24 Ultra 5G in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X