பிச்சிக்குது விற்பனை.. முழுசா ரூ.2000 கம்மி.. 8GB ரேம்.. 1TB மெமரி.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் (Amazon) விற்பனையில் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 6000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்34 போனுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்34 அம்சங்கள் (Samsung Galaxy M34 Specifications): இந்த சாம்சங் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1280 5என்எம் (Octa Core Exynos 1280 5nm) சிப்செட் வருகிறது. அதோடு சாம்சங் ஒன் யுஐ 5.1 ஓஎஸ் (Samsung One UI 5.1 OS) மற்றும் மாலி - ஜி68 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி போனில் 6.5 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு இன்பினிட்டி-யூ எச்டிஆர் (Infinity-U HDR) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. முன்னதாக, இந்த சாம்சங் கேலக்ஸி மாடலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வந்தது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டது.
இப்போது, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா மாடலாகும்.

அதேபோல 13 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் போனில் 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது. மேலும், சைடு-மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor), டைப் - சி ஆடியோ (Type-C audio) கொண்டுள்ளது.
3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 801 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன. இந்த மாடலில் மிட்நைட் ப்ளூ (Midnight Blue), வாட்டர்ஃபால் ப்ளூ (Waterfall Blue) மற்றும் ப்ரிசம் சில்வர் (Prism Silver) ஆகிய மூன்று கலர்கள் வருகின்றன.

இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,499ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, அறிமுகம் செய்யப்பட்ட 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலையில், அமேசான் தளத்தில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்கவுண்ட்டை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதோடு ரூ.19,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.18,999க்கு வாங்கிக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








