Home
Mobile

மிரளவிட்ட விற்பனை.. ரூ.16,249-க்கு SAMSUNG போன்.. 6 OS அப்டேட்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்36 5ஜி (Galaxy F36 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ரூ.16,000 பட்ஜெட்டில் 50 எம்பி கேமரா, ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 சிப்செட், ஃபுல் எச்டி அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.17,499ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் ரூ.16,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.500 விலை குறைப்பு போக வாங்கி கொள்ளலாம். இதுபோக ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,249 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும்.

மிரளவிட்ட விற்பனை.. ரூ.16,249-க்கு SAMSUNG போன்.. 6 OS அப்டேட் வருது!

மொத்தமாக ரூ.1,250 டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கிறது. மேலும், ரூ.16,100 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. பிரீமியம் லுக் கொண்ட லெதர் பேனல் டிசைனில் ஓனிக்ஸ் பிளாக் (Onxy Black) கலர் கிடைக்கிறது. மேலும், கோரல் ரெட் (Coral Red) மற்றும் லக்ஸ் வயலெட் (Luxe Violet) ஆகிய கலர்களிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். முழு பீச்சர்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F36 5G Specifications): ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் மற்றும் அதற்கு ஏற்ப மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

ஏஐ எடிட், ஏஐ சர்ச், ஜெமினி லைவ் போன்ற பீச்சர்களுடன் சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகராக 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சனை கொடுத்து இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் செட்டப் வருகிறது.

இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், இதில் 4K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை கொடுக்கிறது. சைடு-ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் பாட்டர்-போர்ட்டட் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

வேகன் லெதர் பினிஷிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் மற்றும் 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் போன்றவை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாதவையாகும். இதே பட்ஜெட்டில் மற்ற ஸ்மார்ட்போன் பிராண்ட்களில் ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்காது. அதேபோல ஏஐ டெப்த் மேப், நைட் போர்ட்ராய்டு போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
26 Percent Discount on Samsung Galaxy F36 5G With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X