Home
Mobile

முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.20999 போதும்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

டெலிபோட்டோ கேமரா பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் சோனி சென்சார் கேமரா, 2X ஆப்டிகல் ஜூமிங், 3டி அமோலெட் டிஸ்பிளே, 67W சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் ரியல்மி 12 ப்ரோ 5ஜி (Realme 12 Pro 5G) விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி 12 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme 12 Pro 5G Specifications): இந்த ரியல்மியில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் விஷன் டிஸ்பிளே (3D Curved Vision Display) வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.20999 போதும்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே போன்!

இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட், P3 கலர் காமட், 1.7 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த ரியல்மியில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 32 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera Syetem) வருகிறது.

இந்த மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. அதேபோல டெலிபோட்டோவில் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சார் வருகிறது. இந்த கேமராவில் 2X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் ஆட்டோ-ஜூம் டெக்னாஜி (Auto-zoom Technology) வருகிறது.

பிரீமியம் போர்ட்ராய்டு அவுட்புட் கொடுக்க லைட்ஃபியூசன் என்ஜின் (LightFusion Engine), அல்ட்ரா எச்டிஆர் என்ஜின் (Ultra HDR Engine), நைட் ஐ என்ஜின் (NightEye Engine) போன்ற பிரத்யேக டெக்னாலஜிகள் வருகின்றன. ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode), மூன் மோட் (Moon Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.20999 போதும்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே போன்!

மேலும், ஸ்டார்ரி மோட் ப்ரோ (Starry Mode Pro), சூப்பர் நைட்ஸ்கேப் (Super NightScape), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ பியூட்டி (AI Beauty) போன்ற பீச்சர்களும் உள்ளன. இந்த ரியல்மி 12 ப்ரோ 5ஜி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 8 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம்)+ 128 ஜிபி மெமரி வருகிறது.

மேலும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ப்ரோ மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm Mobile) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) சப்போர்ட் வருகிறது.

மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொண்ட அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த ரியல்மியில் IP65 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது.

67W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. லெதர் பேனல் கொண்ட சப்மெரின் ப்ளூ (Submarine Blue) மற்றும் நேவிகேட்டர் பீஜ் (Navigator Beige) கலர்களில் கிடைக்கிறது. இந்த ரியல்மி 12 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆக இருந்தது.

ஆனால், இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.3000 விலை குறைந்து வெறும் ரூ.21,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலையிலும் எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த டெலிபோட்டோ கேமரா போனை வெறும் ரூ.20,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
26 Percent Discount on Realme 12 Pro 5G With 16GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X