Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.13249 போதும்.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 64MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட லாவா போல்டு 5ஜி (Lava Bold 5G) போனுக்கும், 50 எம்பி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்ட லாவா போல்டு என்1 ப்ரோ (Lava Bold N1 Pro) போனுக்கும் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த லாவா போல்டு மாடல்களின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

லாவா போல்டு 5ஜி அம்சங்கள், விலை (Lava Bold 5G Specifications, Price): இந்த லாவா போனில் 3டி கர்வ்ட் டிசைன் கொண்ட 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.13249 போதும்.. 3D கர்வ்ட் டிஸ்பிளே!

இதுவொரு பட்ஜெட் விலை 5ஜி மாடலாக இருப்பதால், ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. ஆனால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் எதிர்பார்க்க முடியாது. லேட்டஸ்ட் மாடலாக இருந்தும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 1 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கிறது.

டிஸ்பிளேவுக்கு அடுத்து கேமரா பிரீமியம் காட்டி இருக்கிறது. அதாவது, சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த கேமராவுக்கு 2 எம்பி செகண்டரி லென்ஸ் மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லாவா போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.13249 போதும்.. 3D கர்வ்ட் டிஸ்பிளே!

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் போக 13,249 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் இந்த டிஸ்கவுண்ட் வருகிறது. இந்த லாவா போல்டு 5ஜி போனில் சப்பயர் ப்ளூ (Sapphire Blue) என்றும் சிங்கிள் கலர் வேரியண்ட் மட்டும் கிடைக்கிறது.

லாவா போல்டு என்1 ப்ரோ அம்சங்கள், விலை (Lava Bold N1 Pro Specifications, Price): இந்த லாவா போல்டு மாடலில் பிளாட் டிஸ்பிளே டிசைன் கொண்ட 6.67 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட இந்த டிஸ்பிளேவில் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.13249 போதும்.. 3D கர்வ்ட் டிஸ்பிளே!

அடிமட்ட பட்ஜெட் மாடலாக இருப்பதால், ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core UNISOC T606 SoC) கிடைக்கிறது. முந்தைய மாடலை போலவே ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மட்டுமே கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கிடைக்காதபடி 50 எம்பி மெயின் கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் பேக் செய்யப்பட்டுள்ளது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 10W சார்ஜர் கிடைக்கிறது. இந்த லாவா போல்டு மாடலின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6,798ஆக இருக்கிறது. இப்போது, ரூ.100 கூப்பன் டிஸ்கவுண்ட், ரூ.200 பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,498 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
26 Percent Discount on Lava Bold 5G With 8GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X