ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.8999 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய பட்ஜெட் பிரியர்கள் ஆளுக்கொரு ஆர்டர் போடும்படியான கம்மி பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், எச்டிபிளஸ் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுத்த ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (itel Color Pro 5G) போனுக்கு அமேசான் விற்பனையில் (Amazon Sale) உடனடி டிஸ்வுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இப்போது மேலும் அடிமட்ட விலைக்கு ஆர்டர் செய்து கொள்ள முடியும். இந்த ஐடெல் போனின் விவரங்கள் இதோ.
டிரெண்டிங் டிசைனில் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு இந்த ஐடெல் கலர் ப்ரோ 5ஜி பக்காவான மாடலாக இருக்கும். டைனாமிக் கலர் சேஞ்ச் (Dynamic Color Change) பேக் பேனல் கிடைக்கிறது. இந்த பேனலுடன் லாவண்டர் பேண்டசி (Lavender Fantasy), ரிவர் ப்ளூ (River Blue) கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

டூயல் கலர் டோன் (Dual Color Tone) கொடுப்பதால், ஐ-காட்ச் லுக் கிடைக்கிறது. மெமரி ஃப்யூசன் டெக்னாலஜி (Memory Fusion Technology) வருகிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபிக்கான டைனாமிக் ரேட் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ஐடெல் கலர் ப்ரோ 5ஜி அம்சங்கள் (itel Color Pro 5G Specifications): இந்த ஐடெல் போனில் 6.56 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே வருகிறது. இந்த எல்சிடி (LCD) டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 267 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் உள்ளது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 எஸ்ஓசி (Octa Core Mediatek Dimensity 6080 SoC) சிப்செட் கிடைக்கிறது. இதுவொரு 6என்எம் மாடலாகும். ஆகவே, இந்த ஐடெல்லில் பர்ஃபாமென்ஸ் பட்ஜெட்டைவிட கூடுதலாக எதிர்பார்க்க முடியும். அதேபோல ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மட்டுமே கிடைக்கிறது.
இந்த ஐடெல் கலர் ப்ரோ 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா கொண்ட டூயல் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ரூ.9000 பட்ஜெட்டில் கேமரா பீச்சர்கள் எதிர்பார்க்க முடியாது என்றாலும், இதில் டூயல் வீடியோ (Dual Video Mode), ஸ்லோவ் மோஷன் மோட் (Slow Motion Mode) மற்றும் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன.
இதுபோக ஏஆர் ஷாட்ஸ் (AR Shots), ஷார்ட் வீடியோ (Short Video), ஸ்கை ஷாப் (Sky Shop) மற்றும் பனோரமா (Panaroma) போன்ற பீச்சர்களும் வருகின்றன. வாட்டர் டிராப் டிசைனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த ஐடெல் கலர் ப்ரோ 5ஜி போனில் 5000mAh பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9999 பட்ஜெட்டில் இருந்தது. இதுவே 5ஜி போனுக்கு கம்மியான விலையாக இருக்கிறது. ஆனால், இப்போது அமேசான் விற்பனையில் ரூ.999.90 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.8999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு டிஸ்கவுண்ட் வருகிறது.


Click it and Unblock the Notifications








