Home
Mobile

பொசுக்குனு ஆஃபர்.. ரூ.4,000 விலை கம்மி.. அடிமட்டதுல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?

பொசுக்குனு ரூ.4000 விலை குறைப்பில் சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களை கொண்ட ஐக்யூ இசட்9 5ஜி (iQOO Z9 5G) கிடைக்கிறது. இப்போது, அமேசான் சேலில் (Amazon Sale) ஆர்டர் செய்தால், அடிமட்ட விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த ஐக்யூ இசட்9 5ஜி போனின் அறிமுக விலை என்ன? இப்போதைய விலை எப்படி? டிஸ்கவுண்ட் மற்றும் கூப்பன் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஐக்யூ இசட்9 5ஜி அமேசான் விற்பனை (iQOO Z9 5G Amazon Sale): இந்த ஐக்யூ போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.19,999 பட்ஜெட்டில் வந்தது. ஆனால், இப்போது, அமேசான் தளத்தில் ரூ.18,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலையிலும் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் இருக்கிறது.

பொசுக்குனு ஆஃபர்.. ரூ.4,000 விலை கம்மி.. அடிமட்டதுல SONY கேமரா மாடல்!

ஆகவே, ரூ.15,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். பேங்க் டிஸ்கவுண்ட்டை பார்க்கையில், எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. இந்த விலைக்கு வாங்க ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்ய வேண்டும். ஈஎம்ஐ வேண்டாம் என்றால், பேங்க் டிஸ்கவுண்ட் ரூ.1,500 மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.17,550 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. இந்த ஐக்யூ இசட்9 5ஜி அம்சங்கள் (iQOO Z9 5G Specifications) எப்படி இருக்கிறது? ரூ.19,999 பட்ஜெட்டில் வெளியானதால், ப்ரீமியம் டிசைன் கொடுக்கிறது. கிராஃபைன் ப்ளூ (Graphene Blue) அல்லது ஃபரஸ்டு கிரீன் (Brushed Green) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

பர்ஃபாமென்ஸ் ஓகேதான். ஏனென்றால், 5ஜி கனெக்டிவிட்டியில் பக்கா அவுட்புட் கொடுக்கும் 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 (4nm Octa Core MediaTek Dimensity 7200) சிப்செட் வருகிறது. யுஐ பக்கம் பார்க்கையில், ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் டைனாமிக்காக கிடைக்கிறது.

ஆகவே, 16 ஜிபி ரேம் அவுட்புட் கிடைக்கும். மெமரியில் 128 ஜிபிக்கு மேல் வேண்டுமானால், 1 டிபி மெமரியை மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் பயன்படுத்தலாம். இதற்கான சிலாட் கிடைக்கிறது. டிடி ஸ்டார்2 கிளாஸ் (DT Star2 Glass) பாதுகாப்பு கொடுக்கும் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது.

மேலும், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. இப்போது கேமராவுக்கு வருவோம். டூயல் ரியர் செட்டப் இருந்தாலும், சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ உள்ளது. இந்த ஐக்யூவில் மீடியம் பேட்டரி பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இது பட்ஜெட்டுக்கு ஏற்பவே 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொடுக்கிறது. மேலும், 5ஜி கனெக்டிவிட்டி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
26 Percent Discount on iQOO Z9 5G With 8GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X