ஆர்டர் வெளுக்குது.. வெறும் ரூ.21,999 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
108 எம்பி மெயின் கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 35W சூப்பர்சார்ஜ், 5800mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் ரூ.25,999 பட்ஜெட்டில் வெளியான ஹானர் எக்ஸ்9பி 5ஜி (HONOR X9b 5G) போன் நம்ப முடியாத டிஸ்கவுண்ட் உடன் ரூ.21,999 பட்ஜெட்டுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. கிளாசிகல் டூயல் ரிங் டிசைனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. இந்த ஹானர் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
ஹானர் எக்ஸ்9பி 5ஜி அம்சங்கள் (HONOR X9b 5G Specifications): இந்த ஹானர் போனில் 3X லாஸ்லெஸ் ஜூம் கொண்ட 108 எம்பி கேமரா வருகிறது. 5 எம்பி அல்ட்ரா வைடு + 2 எம்பி மேக்ரோ சென்சாருடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

ஆகவே, இந்திய கேமரா பிரியர்கள் விரும்பும் பட்ஜெட் மாடலாக இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி இருக்கிறது. டிஸ்பிளேவிலும் பட்டையை கிளப்பும் பீச்சர்கள் வருகின்றன. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலாகும்.
இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 429 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1 பில்லியன் கலர் டெப்த் மற்றும் பி3 கலர் காமட் வருகிறது. ஆன்டி-டிராப் (Anti-Drop) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் மற்றும் டியூரபிலிட்டி இந்த போனில் எதிர்பார்க்கலாம்.
இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனில் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. மேஜிக்ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) பேஸ்டு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் வருகிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட் கொண்டிருக்கிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 35W சூப்பர்சார்ஜ் (SuperCharge) கொண்ட 5800mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 3 நாட்களுக்கு பேக்கப் எதிர்பார்க்கலாம்.
இந்த பேட்டரியுடன் 7.98 மிமீ தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி ஆடியோ ஜாக் வருகிறது. இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. கிளாசிகல் டூயல் ரிங் டிசைனில் 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
ஆகவே, மிட்நைட் பிளாக் (Midnight Black), சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம். இந்த போனானது, அறிமுகம் செய்யப்பட்டபோது, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.25,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.3000 விலை குறைப்பில் வெறும் ரூ.22,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டிலும் ரூ.1000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, 108 எம்பி கேமரா, 5800mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் கொண்ட இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனை வெறும் ரூ.21,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications