Home
Mobile

சாம்சங் வழங்கும் கேலக்ஸி எம் ப்ரோ

By Super
சாம்சங் வழங்கும் கேலக்ஸி  எம் ப்ரோ
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் ப்ரோ ஆன்ட்ராய்டு மொபைலைப் பற்றி பரவலாக தகவல்கள் வருகின்றன. இது கேண்டி பார் வடிவமைப்பை கொண்டதாக வருகிறது. இதன் திரை 2.66 இஞ்ச் எச்விஜிஏ டிஸ்பிளேயுடன் 480 X 320 பிக்ஸல் துல்லியத்தை கொண்டதாக இருக்கிறது. இதனுடைய 256 கே வண்ண அளவுடன் கூடிய டிஎப்டி மானி்ட்டர் பார்ப்பதற்கு பரவசத்தைக் கொடுக்கும். மேலும் இது கிவெர்ட்டி கீபோர்டுடன கூடிய ஸ்டான்டர்ட் கீபேடை கொண்டிருக்கிறது.

இதன் சிபியு 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீடு ஓஎஸ்சில் இயங்குகிறது. மேலும் எல்இடி போக்கஸ் மற்றும் ஆட்டோ போக்கஸ் கொண்ட 5.0 மெகா பிக்ஸல் கேமராவையும் வழங்குகிறது. இதன் விஜிஏ முகப்பு கேமரா மூலம் 3ஜி நெட்வொர்க்கில் எளிதாக வீடியோ கால் செய்ய முடியும்.

மேலும் இது மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய 1ஜிபி இன்டர்னல் சேமிப்புடன் எச்டி வீடியோ ப்ளேபேக்கை வழங்குகிறது. அதனால் கூடுதலாக ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை நாம் சேமிக்க முடியும். மேலும் இந்த மொபைலுடன் இலவசமாக 2ஜிபி மெமரி கார்டும் வழங்கப்படுகிறது.

மேலும் சாம்சங் கேலக்ஸி எம் ப்ரோ ஆட்டோ சுழற்சி மற்றும் ஆட்டோ டர்ன்ஆப் கொண்ட ஆக்ஸலோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்களை கொண்டிருக்கிறது. மேலும் மைக்ரோ யுஎஸ்பி எ2டிபியுடன் ப்ளூடூத் 3.0 வெர்ஷனையும் வழங்குகிறது. விரைவான இண்டர்நெட் இயக்கத்திற்காக 802.11பி/ஜி/என் வைஃபையை வழங்குகிறது.

மல்டி பார்மட்டுகளுடன் கூடிய இதன் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்கள் வாடிக்கையாளர்களை கண்டிப்பாக கவரும். அதாவது, எம்பி3, எஎசி, எஎசி ப்ளஸ், டிபுள்யுடபுள்யு, மற்றும் டபுள்யுஎவி போன்ற ஆடியோ பைல்களையும் எம்பி4, டிஐவிஎக்ஸ், டபுள்யுஎம்பி, 3ஜிபி மற்றும் 3ஜி2 போன்ற வீடியோ பைல்களையும் மிக எளிதாக இயக்கக்கூடியதாக சாம்சங் கேலக்ஸி எம் ப்ரோ வருகிறது.

மேலும், இந்த மொபைல் கூகுள் வாய்ஸ் தேடலுக்கும், டெக்ஸ்டிலிருந்து ஸ்பீச்சுக்கு மாற்றக்கூடிய அப்ளிகேஷன்களையும் வழங்குகிறது. டிஜிட்டல் கம்பாஸும் பெற்றுள்ளது. மேலும் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் மேஸ்பேல் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் ஜிமெயில், ஜிடாக் தளங்களையும் இதில் இயக்கமுடியும்.

கூகுள் மேப், ப்ளாஷ் ப்ளேயர் மற்றும் ஆண்ட்ராய்டு ஆன்லைன் அப்ளிகேஷன்களையும் பதிவிறக்கம் செய்ய முடியும். அனைத்து சிறப்புகளுடன் கூடிய இந்த புதிய மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X