Home
Mobile

ஆற்றல் வாய்ந்த கேமராவுடன் புதிய ஷார்ப் ஸ்மார்ட்போன்

By Super
ஆற்றல் வாய்ந்த கேமராவுடன் புதிய ஷார்ப் ஸ்மார்ட்போன்
எப்படியெல்லாம் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்மொபைல்களை வழங்கலாம் என்பதற்கு ஷார்ப் அக்குவாஸ் ஸ்மார்ட்மொபைல் ஒரு உதாரணம் என்று கூறலாம்.

இந்த ஷார்ப் அக்குவாஸ் 102-எஸ்எச் என்ற மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஐப்பான் நாட்டைச் சேர்ந்த சாஃப்டுபேங்க். இந்த மொபைல் எக்ஸ்டர்னல் ஆன்டெனா கொண்டுள்ளதால், வயர்லெஸ் ரேடியோவிற்கு சமம் என்று கூறலாம்.

நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த வேளையில், அதற்கேற்ற வகையில் தொழில் நுட்ப நிபுணர்களும் பல தொழில் நுட்பத்தைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அப்படி உருவாக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு ஆச்சர்யத்தையும், சந்தோஷத்தையும் மாறிமாறி கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.

அந்த வகையில் ஆன்ட்ராய்டின் புதிய ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களை ஷார்ப் களமிறக்குகிறது. இதில், முதலாவதாக ஷார்ப் அக்குவாஸ் 102-எஸ்எச் என்ற உலகின் முதல் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் புதிய ஸ்மார்ட்போனை ஜப்பான் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறது ஷார்ப்.

ஏராளமான வசதிகளைக் கொடுப்பதற்காகவே இந்த மொபைலில் கூகுள் ஆன்ட்ராய்டு 2.3.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐடி ஓஎம்ஏபி4460 டியூவல் 1.5 ஜிஎச்இசட் கோர் பிராசஸர் கொண்ட இந்த 102-எஸ்எச் மொபைல் கண்கவரும் வடிவம் கொண்டதாகவும் இருக்கும்.

ஷார்ப் அக்குவாஸ் 104-எஸ்எச் மொபைலில் 4.5 இஞ்ச் டிஎப்டி எல்சிடி திரை உள்ளது. இதன் கேமரா வசதியினை சொல்லுவதற்கு வார்த்தைகளே இல்லை. 12.8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட மொபைல் இது என்றால் நம்புவதற்கே கொஞ்ச நேரம் தேவைப்படுகிறது.

அத்தைகைய உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமரா, வாடிக்கையாளர்களின் நலன் கருதி காத்துக் கொண்டிருக்கிறது.

இது 1280 X 720 பிக்ஸல் துல்லியத்தைக் கொடுக்கிறது. 104-எஸ்எச் மொபைலால் துல்லியமான புகைப்படத்தை வழங்க முடியும் என்று சொல்லவும் வேண்டுமா? பொழுதுபோக்கு அம்சமாக இதில் ட்ரை பேண்டு ரேடியோ உள்ளதால், பாடல்களை துல்லியமாக கேட்டு மகிழலாம்.

அதே சாஃப்டபேங்க் மற்றுமொரு ஷார்ப் அக்குவாஸ் 104-எஸ்எச் என்ற ஸ்மார்ட் மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபைல் டெல் மற்றும் பேனாசோனிக் நிறுவனங்களின் படைப்பு. இது 2011 டிசம்பர் மாதம் வெளிவருகிறது.

ஷார்ப் அக்குவாஸ் 102-எஸ்எச் போன்றே 104-எஸ்எச் மொபைலும் பல அரிய வசதிகளைக் கொண்ட மொபைல்தான். ஆனால் இதில் டியூவல் கோர் 1ஜிஎச்இசட் பிராசஸரும், ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் சாஃப்ட்வேரும் பொருத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல்கள் டிசம்பர் 2011 அன்று வெளிவர உள்ளது.

இந்த இரண்டு மொபைல்களின் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் சற்று காத்திருந்து இந்த மொபைல் மாடல்களை வாங்க வேண்டியிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X