கடைகளில் பணம் செலுத்தும் வசதியுடன் புதிய மொபைல்: சாம்சங் அறிமுகம்

Posted By: Staff

கடைகளில் பணம் செலுத்தும் வசதியுடன் புதிய மொபைல்: சாம்சங் அறிமுகம்
கிரெடிட் கார்டு போன்று மொபைல்போனை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வசதி கொண்ட புதிய மொபைல்போனை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரஞ்ச் மற்றும் பார்க்லேகார்டு என்ற புதிய வசதி மூலம் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது இநத மொபைல் மூலம் பணம் செலுத்த முடியும். இதற்காக இந்த போனில் என்எப்சி சிப் பொருத்தப்பட்டுள்ளது.

இது ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கூகுள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கூகுள் வாலட் வசதியை ஒத்ததாக இந்த புதிய பண பரிவர்த்தனை வசதியை சாம்சங் வேவ்-578 கொடுக்கிறது. பல ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் ஆன்ட்ராய்டு கூகுள் வாலட் வசதியை சாம்சங் வேவ்-578ல் இந்த ஆரஞ்ச் மற்றும் பார்க்லேகார்டு சாப்ட்வேர் வசதி மூலம் பெறலாம்.

படா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த புதிய வசதி அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் 3.2 இஞ்ச் டச் டிஸ்ப்ளே வசதி கொண்டது. இது மல்டி டச் டிஎப்டி தொழில் நுட்ப வசதியையும் வழங்குகிறது. சாம்சங் 3ஜி வசதிக்கும் சப்போர்ட் செய்யும்.

புளூடூத் மற்றும் வைபை வசதி இதில் உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆரஞ்ச் அன்ட் பார்க்லேகார்ட் வசதியின் மூலம் பணத்தை சுலபமாக பரிவர்த்தனை செய்ய முடியும்.

உங்கள் மொபைலில் இருந்து இந்த வசதியை வேறொருவர் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் இதில் க்விக் டேப் அப்ளிக்கேஷன் செக்யூரிட்டி உள்ளது. தற்சமயம் பிரிட்டன் வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot